விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கிய ஐடி ஊழியர்கள். முழு விபரம்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழக விவசாயிகள் கடந்த இரண்டு வாரங்களாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் போராடம் நடத்தி வருகின்றனர். முதலில் ஒரு குழுவாக ஆரம்பித்த இந்த போராட்டம் இன்று நாடு முழுவதும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை காப்பாற்ற திரையுலகம் உள்பட பல்வேறு துறையினர்களும் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். இந்த நிலையில் காவல்துறையினர்களின் அனுமதியுடன் ஐடி ஊழியர்களும் விவசாயிகளுக்காக களமிறங்க உள்ளனர். சென்னையை அடுத்த நாளை சோழிங்கநல்லூரில் ஐடி ஊழியர்களின் அமைதிப் போராட்டம் நாளை காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறவுள்ளது.
சோழியங்கநல்லூர் ELCOT SEZ என்ற இடத்தில் நடைபெறவுள்ள இந்த போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு தமிழக மக்களே ஒன்றிணைந்து போராடி வெற்றி பெற்றது போல விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கும் ஐடிஊழியர்கள் ஆதரவு தருவது ஆரோக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments