பேஷன் பட பீஜியமிற்கு பூனை நடை… இளம் நடிகையின் அசத்தல் வீடியோ!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
பாலிவுட்டில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியாகி பட்டையைக் கிளப்பிய படம் fashion. இந்தப் படத்தின் பீஜியம் அனைவராலும் விருப்பப்பட்டது. இந்த பீஜியமிற்கு இளம் நடிகை ஐஸ்வர்யா மேனன் பூனை நடைபோட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் கடும் வைரலாகி இருக்கிறது. இந்த வீடியோவில் ஐஸ்வர்யா ஒரு தேர்ந்த மாடலைப் போன்று பூனை நடை நடந்து ரசிகர்களை கவர்ந்து உள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா மேனன் தமிழில் கடந்த 2012 இல் வெளியான “காதலில் சொதப்புவது எப்படி“ என்ற திரைப்படத்தில் சிறிய வேடத்தில் அறிமுகமானார். அடுத்து “தீயா வேலை செய்யணும் குமாரு“ என்ற படத்திலும் சிறிய வேடத்தில் நடித்து இருந்தார்.
பின்னர் “ஆப்பிள் பெண்ணே“ படத்தின் கதாநாயகியாக அறிமுகமான இவர் தொடர்ந்து “தமிழ் படம்-2“, “நான் சிரித்தால்“ போன்ற முக்கியப் படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து உள்ளார். இவர் கன்னடத்தில் நடித்து கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தசவாலா. அந்தப் படத்தின் நடிப்புக்காக சில விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.
சோஷியல் மீடியாவில் எப்போதும் பிசியாக இருந்துவரும் நடிகை ஐஸ்வர்யா மேனனுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். அந்த வகையில் தற்போது பேஷன் நடை நடந்து இவர் வெளியிட்ட வீடியோவையும் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments