சர்வதேச விண்வெளி நிலையத்தை லைட்டா நகர்த்தி வைத்த விஞ்ஞானிகள்!!! காரணம் இதுதான்…
Send us your feedback to audioarticles@vaarta.com
பொதுவாக விண்வெளிக்கு அனுப்பப்படும் செயற்கைக் கோள்களில் பெரும்பாலானை தொடர்ந்து இயக்கத்தில் இருப்பதில்லை. இயக்கத்தில் இல்லாத செயற்கைக் கோள்களின் உதிரிப்பாகங்கள் விண்வெளியில் மக்கிப் போவதற்கு வழியே இல்லலாமல் வருடக்கணக்காக விண்வெளியிலேயே சுற்றிக் கொண்டு இருக்குமாம். அப்படி சுற்றிக் கொண்டு இருக்கும் விண்வெளிக் கழிவுகள் ஒருவேளை இயக்கத்தில் இருக்கும் செயற்கைக் கோள்களின்மீது பட்டால் பெரும் அபத்தில் முடிந்து விடுவதற்கு வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
சிலநேரத்தில் விண்வெளி கழிவுகள் இயக்கத்தில் இருக்கும் செயற்கைக் கோள்களின்மீது பட்டு அதன் இயக்கத்தையே முற்றிலும் கெடுத்து விடுகிறதாம். அப்படியொரு சூழ்நிலையில் மாட்டிக்கொண்ட சர்வதேச விண்வெளி நிலையத்தை ரஷ்யா மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் ஒன்றாகச் சேர்ந்து காப்பாற்றியுள்ளனர் என்று நாசா விண்வெளி ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையத்தின் சுற்றுப்பாதையில் விண்வெளி கழிவுகள் வரவிருந்தை உணர்ந்து கொண்ட விஞ்ஞானிகள் வெறும் இரண்டு நிமிடத்தில் விண்வெளி நிலையத்தை நகர்த்தி வைத்திருக்கின்றனர். இதனால் விண்வெளி நிலையத்தின் மீது படவிருந்த கழிவுகள் சுற்றுப்பாதையில் இருந்து விலகி 1.5 கிலோ.மீ தூரத்தில் பயணித்து சென்றதாகத் தகவல் கூறப்படுகிறது.
ஒருவேளை விண்வெளி நிலையத்தின் மீது அந்தக் கழிவுகள் பட்டிருந்தால் விண்வெளி நிலையத்திற்கு பெருத்த சேதம் உண்டாகியிருக்கும் எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்து கருத்துக் கூறிய நாசா தலைவர் ஜிம் பிரிடென்ஸ்டைன் “சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்த விஞ்ஞானிகள் மிகுந்த முன்னெச்சரிக்கையோடு விண்வெளி கழிவுகள் மீது மோதுவதை தவிர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். முடியாத பட்சத்தில் அதில் இருந்து வெளியேறவும் அவர்கள் தயாராக இருந்தனர். இந்த கழிவுகள் 2018 ஆம் ஆண்டு ஜப்பான் அனுப்பிய ராக்கெட்டின் உடைந்த பாகங்களாகும். இது கடந்தாண்டு 77 பாகங்களாக உடைந்தது என்றும் தெரிவித்து உள்ளார்.
மேலும் சர்வதேச விண்வெளி நிலையம் பூமியில் இருந்து 420 கி.மீ தொலைவில் புவியின் வட்டப்பாதையில் மணிக்கு 17 ஆயிரம் மைல் வேகத்தில் சுற்றி வருகிறது. இந்த வேகத்தில் சிறிய பொருள் ஏதாவது பட்டால் கூட விண்கலத்தின் சோலார் பேனல் உள்ளிட்ட முக்கிய பாகங்கள் உடைந்து விடக்கூடும். கடந்த 1999 முதல் 2018 ஆம் ஆண்டு வரையில் இதுவரை 25 முறை இத்தகைய மோதல் தவிர்க்கப்பட்டு உள்ளது என நாசா தெரிவித்ததாக தினகரன் செய்தி வெளியிட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments