கனரக ராக்கெட்டை முதன்முதலில் செலுத்தும் இஸ்ரோ: வரலாற்று நிகழ்வு என விஞ்ஞானிகள் பெருமிதம்
Send us your feedback to audioarticles@vaarta.com
விண்வெளித்துறையில் இந்திய விஞ்ஞானிகள் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு சவால்விடும் வகையில் வெற்றிகரமாக செயற்கைக்கொள்களை அனுப்பி வைக்கும் நிலையில் இன்று ஜிஎஸ்எல்வி மார்க் - 3 ராக்கெட் (GSLV-Mark III launch) என்ற ராக்கெட்டை இந்தியா விண்ணில் செலுத்துகிறது.
முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரான இந்த கனரக ராக்கெட் கிரையோஜெனிக் தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. முழுவதுமாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் கனரக ராக்கெட் என்ற பெருமையை பெற்றுள்ள இந்த ராக்கெட் நான்காயிரம் கிலோ எடையுள்ள செயற்கைக்கோளைச் சுமந்து செல்லும் திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தச் செயற்கைக்கோளின் மொத்த எடை 3,136 கிலோ ஆகும். ஜிசாட் 19 செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் இன்று மாலை சரியாக 5.28 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்கான கவுண்ட் டவுன் நேற்று தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
இனிவரும் காலங்களில் சொந்த மண்ணில் இருந்து தொலைத்தொடர்பு செயற்கைக்கோள்களை இந்தியா விண்ணில் நிலைநிறுத்த இந்த செயற்கைக்கொள் வழிவகுக்கும் என்று இஸ்ரோ தலைவர் கிரண் குமார் தெரிவித்துள்ளார். ஸ்ரீஹரிகோட்டாவின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் இன்று செலுத்தப்படவுள்ளதாகவும், இது ஒரு வரலாற்று நிகழ்வு என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout