எதற்காக பி.எஸ்.எல்.வி-சி48 விண்ணில் ஏவப்பட்டது..!
Send us your feedback to audioarticles@vaarta.com
இன்று (டிசம்பர் 11) மாலை இந்தியாவின் பி.எஸ்.எல்.வி-சி48 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் பூமியை கண்காணிப்பதற்காக இந்தியாவின் ”ரிசாட்-2பிஆர்1” என்ற செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தூயது. இது ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி-சி48 ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டது.
இன்று பிற்பகல் 3.25 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது . இதனுடன் இஸ்ரேல், ஜப்பான், இத்தாலி ஆகிய நாடுகளை சேர்ந்த தலா ஒரு செயற்கைக்கோள், அமெரிக்காவின் 6 செயற்கைக்கோள் ஆகியவை அனுப்பப்படுகின்றன.பூமியில் இருந்து 576 கி.மீ உயரத்தில் 37 டிகிரியில் நிலைநிறுத்தப்படுகிறது. பி.எஸ்.எல்.வி-சி48 ராக்கெட்டில் முதல் நிலையில் திட எரிபொருளும், இரண்டாம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பப்பட்டு இருந்தன.
இந்த ராக்கெட்டின் உயரம் 44.4 மீட்டர் ஆகும். இதில் பொருத்தப்பட்டுள்ள 628 கிலோ எடை கொண்ட ”ரிசாட்-2பிஆர்1” செயற்கைக்கோளில் நவீன ரேடார்கள் இடம்பெற்றிந்தன. இவை பூமியை துல்லியமாக படம்பிடிக்கும். இந்த தகவல்கள் பாதுகாப்புத் துறைக்கு வலுசேர்ப்பதாக இருக்கும். இதன் மூலம் கிடைக்கும் தகவல்களை வேளாண்மை, பேரிடர் மேலாண்மை. உள்ளிட்டவற்றிற்கும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.இந்த செயற்கைக்கோள் அடுத்த 5 ஆண்டுகளுக்கு செயல்பாட்டில் இருக்கும். இது பி.எஸ்.எல்.வி வகை ராக்கெட்டின் 50வது திட்டம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் 75வது ராக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது. ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
பி.எஸ்.எல்.வி-சி48 ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதை காண, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் பொதுமக்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்படுகிறது.இன்று செலுத்தப்பட ராக்கெட்டில் இடம்பெற்றுள்ள ரிசாட்-2பிஆர்1 செயற்கைக்கோளை இஸ்ரேல் நாட்டின் ஹெர்ஸ்லியா அறிவியல் மையம் மற்றும் ஷா’ஆர் ஹெனிஜிவ் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர்.இது விண்ணில் இருந்து பூமியை ஆய்வு செய்ய இஸ்ரேல் மாணவர்களுக்கு பெரிதும் உதவும். கல்வி சார்ந்த செயற்கைக்கோளான இதில் கேமரா, ரேடியோ டிராஸ்பாண்டர் உள்ளிட்டவை இருக்கின்றன.குறிப்பாக காற்று மற்றும் தண்ணீர் மாசுபாடு, வனப்பகுதி கண்காணிப்பு ஆகியவை குறித்த ஆய்விற்கு பயன்படுத்தப்படுகிறது.
இந்த செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு செயல்படும் பட்சத்தில் இஸ்ரேல் மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் திளைப்பர் என்பதில் சந்தேகமில்லை.
Today’s launch was the 50th launch of #PSLV & 75th launch from our space port in Sriharikota.
— ISRO (@isro) December 11, 2019
Thanks for your support. pic.twitter.com/n7wDJyiGCN
#PSLVC48 carrying #RISAT2BR1 & 9 customer satellites successfully lifts off from Sriharikota pic.twitter.com/Y1pxI98XWg
— ISRO (@isro) December 11, 2019
Watch Live: Launch of RISAT-2BR1 and 9 customer satellites by PSLV-C48 https://t.co/isQxtthNAR
— ISRO (@isro) December 11, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aarna Janani
Contact at support@indiaglitz.com
Comments