முதுமைக்கு டாட்டா காட்டும் புது கண்டுபிடிப்பு… அசத்தும் விஞ்ஞானிகள்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
முதுமை என்பது மனித வாழ்க்கையில் மட்டுமல்ல, அனைத்து உயிரினங்களிலும் நடக்கும் சாதாரண நிகழ்வு. இந்த நிகழ்வை இனிமேல் ஒரு நோயாகக் கருதி அதைக் குணப்படுத்தும் மருத்துவம் ஒருவேளை எதிர்காலத்தில் வரலாம் எனக் கூறும் அளவிற்கு புதுமையான கண்டுபிடிப்பு ஒன்றை இஸ்ரேலிய விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர்.
டெல் அவிவ் பல்கலைக்கழகம் மற்றும் ஷமிர் மருத்துவப் பல்கலைக் கழகம் இரண்டும் இணைந்து உருவாக்கிய இந்தக் கண்டுபிடிப்பினால் முதுமையை 25 வருடங்களுக்கு தள்ளிப்போட முடியும் எனக் கூறப்படுகிறது. மேலும் இத்தகைய செயலுக்கு மருந்து, மாத்திரைகள் என்று எதுவும் தேவைப்படாமல் வெறுமனே ஆக்சிஜனைக் கொண்டு முதுமையை சரிப்படுத்த முடியும் என்றும் அவிவ் பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானி ஷாய் எஃப்ராடி என்பவர் ஜெருசலேம் போஸ்ட் பத்திரிகையிடம் தெரிவித்து உள்ளார்.
ஒரு அறையில் உயர் அழுத்த மட்டத்தில் ஆக்ஸிஜனை வழங்கி அதன் மூலம் முதுமை அடையும் செல்லுலர் அடிப்படையை மாற்றியமைக்க முடியும் என்று அந்த விஞ்ஞானிகள் நிரூபித்து உள்ளனர். டெலோமியர் ஷார்டெனிங் எனப்படும் இந்த முறைக்கு அந்த விஞ்ஞானிகள் ஹொயி கிரெயில் எனப் பெயர் வைத்து உள்ளனர். உயர் அழுத்த மட்டத்தில் செலுத்தப்படும் ஆக்ஸிஜன் மனித உடலில் உள்ள செல்லுலர் அடிப்படையை மாற்றி அமைத்து அதனால் 25 வருட முதுமை குறையும் என்பது விஞ்ஞானிகள் மட்டம் பெரும் வரவேற்பாகப் பார்க்கப்படுகிறது.
இதே முறையைப்பயன்படுத்தி முதுமை மற்றும் நோயுடன் தொடர்புடைய மற்ற பிரச்சனைகளையும் எதிர்காலத்தில் குணப்படுத்தலாம் என்று அந்த விஞ்ஞானிகள் குழு நம்பிக்கை தெரிவித்து உள்ளது. மனித உடலில் உள்ள டெலோமியர் நீடிப்பை மட்டுப்படுத்தும் ஒருமுறை கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் எதிர்காலத்தில் முதுமை ஒரு வியாதி மட்டுமே எனக் கருதும் நிலைமை உருவாகும் என்றும் பலர் கருத்துக்கூறி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout