விபத்தில் துண்டான சிறுவன் தலை… மீண்டும் பொருத்தி புது சாதனையே படைத்த மருத்துவர்கள்!

  • IndiaGlitz, [Saturday,July 15 2023]

இஸ்ரேல் நாட்டில் விபத்தில் துண்டான 12 வயது சிறுவனின் தலையை சிக்கலான அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் பொருத்தி மருத்துவர்கள் சாதனையைப் படைத்துள்ள சம்பவம் உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

இஸ்ரேல் நாட்டில் வசித்துவந்த 12 வயது சிறுவன் சுலைமான் ஹாசன். கடந்த மாதம் சைக்கிள் ஓட்டிச்சென்ற இந்த சிறுவன் மீது கார் ஒன்று வேகமாக மோதியதால் விபத்து ஏற்பட்ட நிலையில் அவனுடைய முதுகுத்தண்டில் இருந்து ஏறக்குறைய அவனுடைய தலை பிரிந்திருக்கிறது. மேலும் தசைநார்கள் கடுமையாக கிழிந்ததுடன் முதுகுதண்டில் இருந்து தலையின் பெரும்பாலான முன்பகுதி கிழிந்து முதுகு தண்டு எலும்பில் இருந்து மண்டை ஓடு பிரிந்திருக்கிறது.

இதையடுத்து விபத்துக்குள்ளான சிறுவன் உடனடியாக விமானம் மூலம் ஹடாசா மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு உள்ளார். அங்குள்ள எலும்பியல் மருத்துவர்கள் சிக்கலான அறுவை சிகிச்சையை புது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செய்துள்ளனர். அட்லாண்டோ ஆக்ஸிபிடல் மூட்டு இடம்பெயர்வு என அழைக்கப்படும் இந்த சிக்கலான அறுவை சிகிச்சையை டாக்டர் ஒஹட் ஈனாவ் என்பவர் தனது குழுவினருடன் புது தொழில்நுட்பத்தை வைத்து செய்ததாகக் கூறப்படுகிறது.

அதாவது முன்பகுதி முழுவதும் கிழிந்து தொங்கிக் கொண்டிருந்த சிறுவனின் தலைக்குள் புது தொழில்நுட்பத்தால் செய்யப்பட்ட பிளேட்டுகளை பொருத்தி CCrvical Splint எனும் அறுவை சிகிச்சையை செய்துள்ளனர். மேலும் 50% நம்பிக்கையை மட்டுமே கொண்டிருந்த மருத்துவர்கள் கடந்த மாதமே நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சை குறித்து எதுவும் அறிவிக்காத நிலையில் தற்போது சிறுவன் குணமடைந்துள்ள நிலையில் அதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ளனர்.

மேலும் தற்போது சிறுவன் நரம்பியல் அடிப்படையிலும் உணர்வு அடிப்படையில் மிக நல்ல முன்னேற்றத்தை அடைந்துள்ளதாகவும் எந்தவித சிக்கலும் இல்லாமல் அவர் குணமடைந்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மிகவும் சிக்கலான இந்த அறுவை சிகிச்சையினால் தற்போது உதவியாளர் இன்றி சுலைமான் ஹாசன் நடந்து செல்வதைப் பார்த்து அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய மருத்துவர் ஓஹட் ஈனாவ் மருத்துவத் துறையில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் திறமையான மருத்துவர்கள் வேண்டும். நிபுணத்துவத்தினால் எந்தவித சிக்கலையும் தீர்த்துவிட முடியும் என்று அவர் கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
 

More News

முழுவதும் முடிந்தது 'லியோ' படப்பிடிப்பு.. லோகேஷ் எடுத்து கொண்டது எத்தனை நாள் தெரியுமா?

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'லியோ' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின்

விஜய் டிவி பிரபலத்தின் நிச்சயதார்த்தம்.. பொண்ணு முகத்தை காட்டாமல் ஒரு போட்டோஷூட்..!

விஜய் டிவி பிரபலத்தின் நிச்சயதார்த்த புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் பெண்ணின் புகைப்படம் மறைக்கப்பட்டுள்ளதை ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

பாசிட்டிவ் விமர்சனம் எதிரொலி.. முதல் நாள் 'மாவீரன்' வசூல் இத்தனை கோடியா?

சிவகார்த்திகேயன் நடித்த 'மாவீரன்' திரைப்படம் நேற்று பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான நிலையில் இந்த படம் ஏராளமான பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது

To a message he replied with a thumbs-up emoji, now he has to pay Rs 60 lakh

ஸ்மார்ட் போன் பயனாளர்களிடைய எமோஜிக்கள் சாதாரணமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன

கொலைவெறியில் ரத்தம் சொட்ட சொட்ட வெட்டும் ஹனிரோஸ்.. மிரட்டும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

தமிழ், தெலுங்கு, மலையாள நடிகையான ஹனிரோஸ் நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் அவர் வெறித்தனமாக ரத்தம் சிந்த சிந்த மாட்டுக்கறி வெட்டும் காட்சி உள்ளதை அடுத்து ரசிகர்கள்