உலகின் விலையுயர்ந்த மாஸ்க்: விலை எத்தனை கோடி தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் உலகில் உள்ள அனைவருமே மாஸ்க் அணிய வேண்டும் என உள்ளூர் சுகாதார மையம் முதல் உலக சுகாதார மையம் வரை அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில் பத்து ரூபாய் முதல் 200 ரூபாய் வரை மருந்து கடைகளில் மாஸ்குகள் விற்பனையாகி வரும் நிலையில் ரூபாய் 11 கோடியில் ஒரு மாஸ்க் தயாராகி உள்ளது என்பதும் இந்த மாஸ்க் தான் உலகின் விலையுயர்ந்த மாஸ்க் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியா உள்பட ஒருசில நாடுகளில் தங்கம் மற்றும் வைரம் கலந்த மாஸ்க் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது என்றும் இவற்றின் விலை இலட்சக்கணக்கில் இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தது. இந்த நிலையில் உலகின் விலையுயர்ந்த மாஸ்க் ஒன்றை இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த நிறுவனமொன்று வடிவமைத்துள்ளது இதன் விலை 1.5 மில்லியன் டாலர் என்றும் அதாவது இந்திய மதிப்பில் 11.23 கோடி ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இஸ்ரேலை சேர்ந்த பிரபல நகை நிறுவனம் ஒன்று இந்த மாஸ்க்கை அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 18 காரட் எடை கொண்ட தங்கத்தினால் செய்யப்பட்ட இந்த மாஸ்க்கில் 3600 எண்ணிக்கை கொண்ட கருப்பு மற்றும் வெள்ளை நிற கற்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இவ்வளவு விலையுயர்ந்த இந்த ஆடம்பரமான மாஸ்க், கொரோனா வைரஸிடம் இருந்து மனிதர்களை பாதுகாக்குமா? என்பது கேள்விக்குறியே.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout