ஒரு நிமிஷத்தில் 11 மாடி கட்டிடம் இடிப்பு… காஸாவில் கணக்கே இல்லாமல் தொடரும் உயிரிழப்பு!

  • IndiaGlitz, [Monday,May 17 2021]

கடந்த மே 10 ஆம் தேதி முதல் பாலஸ்தீனர்கள் அதிகம் வசிக்கும் ஜெருசலேம் தலைநகர் காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவத்திற்கும் ஹமாஸ் இயக்கத்திற்கும் இடையே கடும் மோதல்கள் ஏற்பட்டு வருகிறது. இதனால் காஸாவில் இதுவரை 188 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் கணக்கே இல்லாத வான்வழித் தாக்குதல்களும், ஏவுகணைகளும், துப்பாக்கிச் சூடுகளும் தொடர்ந்து அந்தப் பகுதியில் நடத்தப்படுவதாகச் சர்வதேச செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

இதனால் காஸாவில் உள்ள பெரும்பாலான கட்டிடங்கள் இடிக்கப்பட்டு இந்த இடிபாடுகளுக்குள் சிக்கி குழந்தைகள் மற்றும் பெண்கள் அதிகளவில் உயிரிழந்து வருவதாக ஐ.நா. சபை தலைவர் ஆண்டானியே குட்டரல் கண்டனக் குரல் எழுப்பி உள்ளார். 7 ஆவது நாளைக் கடந்து நடத்தப்பட்டு வரும் இந்த மோதல்கள் குறித்து தற்போது உலக நாடுகள் கண்டனம் வெளியிட்டு வருகின்றன.

ரம்ஜானை முன்னிட்டு கடந்த மே 10 ஆம் தேதி ஜெருசலேமில் உள்ள அல்-அக்சா மசூதியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தியுள்ளனர். இவர்களை இஸ்ரேல் காவல்துறை திடீரென வெளியேறுமாறு வற்புறுத்தி இருக்கிறது. இதனால் அங்கிருந்த பாலஸ்தீனர்கள் பலர் வெளியேற மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். ஆனால் இஸ்ரேல் காவல்துறை அவர்களை வலுக்கட்டயமாக வெளியேற்றியதால் காஸாவில் கடும் பதற்றம் ஏற்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் காஸாவில் பல ஆண்டுகளாக குடியிருக்கும் பாலஸ்தீனர்களை வெளியேற்றுவதற்கு மறுப்பு தெரிவித்து போராடி வரும் ஹமாஸ் இயக்கம் இஸ்ரேல் மீது இரவோடு இரவாக வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டு இருக்கிறது. இந்த ஒன்றுதான் தற்போது காஸா பற்றி எரிந்து போவதற்கு அடிப்படை காரணமாகவும் மாறி இருக்கிறது.

கிறிஸ்துவத்தில் புனித நகரமாக கருதப்படும் ஜெருசலேமின் ஒரு பகுதியை (கிழக்கு ஜெருசலேம்) ஐ கடந்த 1967 ஆம் ஆண்டு இஸ்ரேல் இராணுவம் கைப்பற்றியது. அதோடு கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகரமாகவும் அறிவித்தது. பல உலக நாடுகள் இந்த மாற்றத்தை விரும்பவில்லை. ஆனால் அமெரிக்காவின் முன்னாள் அதிபராக இருந்த டொனால்ட் ட்ரம்ப் இந்த மாற்றத்திற்கு பெரிதும் விருப்பம் தெரிவித்து இருந்தார்.

கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் கடந்த 1967 ஆம் ஆண்டு முதல் சொந்தம் கொண்டாடி வருவதோடு அங்கிருக்கும் பாலஸ்தீனர்களை வெளியேற்றுவதிலும் கடும் முனைப்பு காட்டி வருகிறது. இந்த வெளியேற்றத்திற்கு மறுப்பு தெரிவித்து ஹமாஸ் இயக்கம் போன்ற பல்வேறு அமைப்புகள் தற்போது கையில் ஆயுதங்களை எடுத்துள்ளன. இதனால் காஸா நகரம் முழுவதும் அழிந்து போகும் அளவிற்கு தற்போது இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்து அந்தப் பகுதி முழுவதும் ஆக்கிரமித்து வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

இதன் உச்சக்கட்டமாக இஸ்ரேல் இராணுவம் நேற்று காஸாவில் உள்ள ஒரு 11 மாடி அல்-ஜாலா கட்டிடத்தை ஒரு நிமிடத்தில் தகர்த்துள்ளது. மேலும் இந்தக் கட்டிடத்தை இடிக்கப் போகிறோம் என அறிவித்த இஸ்ரேல் இராணுவம் வெறும் ஒரு மணிநேரம் மட்டுமே அவகாசம் கொடுத்ததாகவும் இதனால் அந்தக் கட்டிடத்தில் குடியிருந்த 60 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கிருந்து உடனடியாக கையில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு கட்டிடத்தை விட்டு வெளியேறி உள்ளனர்.

பலர் அந்தக் கட்டிடத்தில் இருந்து வெளியேறாத நிலையில் இன்னும் 10 நிமிடங்கள் அவகாசம் தாருங்கள் என இஸ்ரேல் இராணுவத்திடம் அந்தக் கட்டிடத்தின் உரிமையாளர் என கெஞ்சியுள்ளார். ஆனால் இதற்கெல்லாம் மசியாத இஸ்ரேல் இராணுவம் குறித்த நேரத்தில் கட்டிடத்தை இடித்து தரை மட்டமாக்கியுள்ளது. இதனால் 42 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்தச் சம்பவத்திற்கு தற்போது உலக நாடுகள் கடும் கண்டனம் வெளியிட்டு வருகின்றன.

More News

குஜராத் மாநிலத்தில் நிலநடுக்கம்?

குஜராத் மாநிலம் தெற்கு ராஜ்கோட் பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

முன்னாள் எம்.பி காலமானார்...! அரசியில் கட்சியினர் இரங்கல்...!

காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த முன்னாள் எம்.பி இன்று வயது மூப்பினால் காலமானார்.

பயன்பாட்டுக்கு வந்த 2DG கொரோனா சிகிச்சை தூள் மருந்து? எங்கு கிடைக்கும்?

கொரோனா சிகிச்சைக்கு உதவும் வகையில் தூள் வடிவிலான 2DG எனப்படும் ஒரு மருந்து இந்தியாவில் உருவாக்கப்பட்டு உள்ளது.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு முக்கிய பொறுப்பு கொடுத்த முதல்வர் ஸ்டாலின்! குவியும் பாராட்டுக்கள்!

தமிழக முதல்வராக சமீபத்தில் பொறுப்பேற்ற முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை அதிரடியாக எடுத்து வருகிறார் என்பதும் குறிப்பாக அனைத்து கட்சிகளையும் கூட்டி

ரெம்டெசிவிர் வாங்க நேரு ஸ்டேடியத்திற்கு வரவேண்டாம்: காவல்துறை அறிவிப்பு

கொரனோ நோயாளிகளுக்கு செலுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் விற்பனை செய்யப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களாக நேரு ஸ்டேடியத்தில்