தடுப்பூசிக்கு ஒரே விலையில்லையா...? மத்திய அரசை  சரமாரியாக கேள்வி கேட்கும் மம்தா, சோனியா....!

  • IndiaGlitz, [Thursday,April 22 2021]

தடுப்பூசிக்கு வெவ்வேறு விலை நிர்ணயித்துள்ளதால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியும் மத்திய அரசை பார்த்து சரமாரியாக கேள்வி கேட்டுள்ளனர்.

கொரோனாவின் 2-ஆம் கட்ட அலை பெரும் தாக்கத்தையே ஏற்படுத்தி வருகிறது. முதல்கட்டமாக 60 வயதிற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதைத்தொடர்ந்து மே-1 ஆம் தேதி முதல் 18-வயதிற்கும் அதிகமானோருக்கு கொரோனாதடுப்பூசி போடப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்ட் தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 என்றும், மாநில அரசுகளுக்கு ரூ.400 என்றும் விற்பனை செய்யப் போவதாக, இந்திய நிறுவனம் சீரம் அறிவித்திருந்தது.
இதையடுத்து கோவிஷீல்ட் தடுப்பூசியை வரும் ஏப்ரல்-24-ஆம் தேதி முதல் 18-வயதிற்கும் மேற்பட்டவர்கள் போட்டுக்கொள்ள, இன்று ஆன்லைன் பதிவு துவங்கவுள்ளதாக மத்திய அரசு அறிக்கை வெளியிட்டு இருந்தது.

இதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மோடிக்கு இரண்டு பக்க கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது,

18 வயது முதல் 45 வயது வரை உள்ள இந்திய பொதுமக்களுக்கு இலவச தடுப்பூசியை மத்திய அரசு வழங்க வேண்டும். ஆனால் மத்திய அரசு இதை இந்த பொறுப்பை கைவிட்டுள்ளது. கடந்த ஆண்டில் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வலி மற்றும் நிலைமை குறித்து மத்திய அரசு இன்னும் உணரவே இல்லை.

மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி விலை ஒரே மாதிரி இருக்கவேண்டும்.புதிய கோவிட் கொள்கையில் தடுப்பூசியின் விலை ஒரேமாதிரியாக இல்லை. அரசு மக்களிடத்தில் பாரபட்சம் காட்டுவது போல் தோன்றுகிறது என சோனியா காந்தி அவர்கள் கூறியுள்ளார்.

இதுபற்றி மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த வியாழன்று டுவிட்டரில் கூறியிருப்பதாவது,

இந்திய அரசு கொரோனா தடுப்பூசிக்கு ஒரு விலையைத்தான் நிர்ணயிக்க வேண்டும். வயது, சாதி, மதம், இருப்பிடம் உள்ளிட்டவற்றை பொருட்படுத்தாமல் குடிமகன்களுக்கு தடுப்பூசி வழங்க வேண்டும்.

ஒரே தேசம், ஒரே கட்சி, ஒரே தலைவர் என்று கூறும் கட்சியினர், மக்களின் உயிரைக் காக்கும் தடுப்பூசிக்காக ஒரே விலையை நிர்ணயிக்க தவறுவது ஏன் என்று பதிவிட்டுள்ளார்.


 

More News

அலட்சியத்தால் அமர்ந்த நிலையிலேயே உயிரிழந்த கொரோனா நோயாளி… பகீர் சம்பவம்!

மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் அமர்ந்த நிலையிலேயே உயிரிழந்து உள்ளார்

உறவினர்களே அவமிதிப்பு… கொரோனாவால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்த முஸ்லீம் இளைஞர்கள்!

தெலுங்கானா மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்த ஒருவரின் உடலை இரண்டு முஸ்லீம் இளைஞர்கள் அதுவும் இந்து முறைப்படி சடங்குகள் செய்து அடக்கம் செய்த காட்சி பார்ப்போரை கண்கலங்கை வைத்துள்ளது.

வாய்ஸ் மெசேஸ் அனுப்பி சிறுவனை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்… எதற்கு தெரியுமா?

கேரளாவைச் சேர்ந்த 9 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளிச் சிறுவனுக்கு தமிழ் சினிமா உலகின் முன்னணி நட்சத்திரமாக இருந்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

கொரோனாவை குத்துவிட்டு விரட்டும் நடிகை அதாஷர்மா!

இந்தியா உள்பட உலகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டு

குப்பையில் கிடந்த 10 பவுன் நகை: தூய்மை பணியாளரின் நேர்மையால் நடந்த பெண்ணின் திருமணம்!

கொருக்குப்பேட்டை பகுதியில் பெண் ஒருவரின் திருமணம் நடக்க காரணமாக இருந்த தூய்மைப் பணியாளரின் நேர்மையை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.