ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் சுட்டுக்கொலை… பகிரங்க அறிவிப்பு வெளியிட்ட அதிபர்!

  • IndiaGlitz, [Friday,February 04 2022]

சிரியாவில் நடைபெற்ற வான் தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பகிரங்க அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

சிரியாவில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளை ஒடுக்குவதற்காக அமெரிக்க இராணுவம் தீவிரம் காட்டிவருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த செவ்வாய்கிழமை ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதக் குழு மீது வான் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் அந்த அமைப்பின் தலைவர் அபு இப்ராஹிம் அல் ஹாசிமி அல் குரேஷி கொல்லப்பட்டதாக நேற்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பகிரங்கமாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

மேலும் இதுகுறித்து பேசிய அதிபர் ஜோ பைடன் நமது படைகளின் திறமை மற்றும் துணிச்சலுக்கு நன்றி. நாம் போர்களத்தில் இருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் அபு இப்ராஹிம் அல்-ஹாசிமி அல்-குரேஷியை அகற்றி உள்ளோம். இந்த நடவடிக்கையின்போது அமெரிக்க படை வீரர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. பத்திரமாக திரும்பியுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமெரிக்காவின் மூத்த அதிகாரி ஒருவர் பேசியபோது இரவு நேரத்தில் நடைபெற்ற இந்தத் தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் தலைவர் மட்டுமல்லாது அவரது குடும்பத்தினரும் இறந்துபோனதாகத் தெரிவித்து இருக்கிறார்.

More News

த்ரிஷாவைத் தொடர்ந்து விலங்குகளுக்காகக் குரல் கொடுக்கும் தனுஷ் பட நடிகை!

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான “பொல்லாதவன்“ திரைப்படத்தில்

பிறந்தநாளில் மறக்க முடியாத பரிசு பெற்ற நடிகர் சிம்பு!

நடிகர் சிம்பு நேற்று தன்னுடைய 39 ஆவது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக

பெற்றோர் வசித்த வீட்டை திடீரென விற்ற அமிதாப் பச்சன்… என்ன காரணம்?

பாலிவுட்டில் “பிக் பி“ என அழைக்கப்படும் நட்சத்திர நடிகரான நடிகர்

மனித நேயத்தின் உச்சம்… அறுந்த செருப்பை சரிசெய்து மூதாட்டிக்கு மாட்டிவிட்ட டிஎஸ்பி!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தற்போது

ஒலிம்பிக் தீபத்துடன் சீனப் பெருஞ்சுவரில் ஓடிய பிரபல நடிகர் ஜாக்கிசான்… வைரல் புகைப்படம்!

சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் தொடர் போட்டியை முன்னிட்டு அந்தப்