ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் சுட்டுக்கொலை… பகிரங்க அறிவிப்பு வெளியிட்ட அதிபர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிரியாவில் நடைபெற்ற வான் தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பகிரங்க அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
சிரியாவில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளை ஒடுக்குவதற்காக அமெரிக்க இராணுவம் தீவிரம் காட்டிவருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த செவ்வாய்கிழமை ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதக் குழு மீது வான் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் அந்த அமைப்பின் தலைவர் அபு இப்ராஹிம் அல் ஹாசிமி அல் குரேஷி கொல்லப்பட்டதாக நேற்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பகிரங்கமாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
மேலும் இதுகுறித்து பேசிய அதிபர் ஜோ பைடன் நமது படைகளின் திறமை மற்றும் துணிச்சலுக்கு நன்றி. நாம் போர்களத்தில் இருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் அபு இப்ராஹிம் அல்-ஹாசிமி அல்-குரேஷியை அகற்றி உள்ளோம். இந்த நடவடிக்கையின்போது அமெரிக்க படை வீரர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. பத்திரமாக திரும்பியுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமெரிக்காவின் மூத்த அதிகாரி ஒருவர் பேசியபோது இரவு நேரத்தில் நடைபெற்ற இந்தத் தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் தலைவர் மட்டுமல்லாது அவரது குடும்பத்தினரும் இறந்துபோனதாகத் தெரிவித்து இருக்கிறார்.
Last night at my direction, U.S. military forces successfully undertook a counterterrorism operation. Thanks to the bravery of our Armed Forces, we have removed from the battlefield Abu Ibrahim al-Hashimi al-Qurayshi — the leader of ISIS.
— President Biden (@POTUS) February 3, 2022
https://t.co/lsYQHE9lR9
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com