டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை படைத்த இந்திய வீரர்! குவியும் பாராட்டு!
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்து மற்றும் இந்தியாவிற்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பல்வேறு திருப்பங்களுடன் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்கிஸில் 578 ரன்களை குவித்த இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி 337 ரன்களில் சுருண்டது. இந்நிலையில் டிக்ளேர் செய்ய வாய்ப்பு இருந்தும் இங்கிலாந்து அவ்வாறு செய்யாமல் தன்னுடைய 2 ஆவது இன்னிங்ஸை தொடங்கியது.
ஆனால் தன்னுடைய 2 ஆவது இன்னிங்கிஸில் இங்கிலாந்து அணி 178 ரன்களுக்கு சுருண்டது. இதனால் தற்போது 419 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் ரோகித் சர்மா தற்போது 12 ரன்களில் ஆட்டம் இழக்க சுப்மன் கில் மற்றும் புஜாரா ஜோடி சேர்ந்து விளையாடி வருகின்றனர். இதற்கிடையே இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய 300 ஆவது விக்கெட்டை வீழ்த்தி இருக்கிறார். இதனால் அவருக்கு ரசிகர்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2 ஆவது இன்னிங்கிஸில் இங்கிலாந்து வீரர் டேனியல் லாரன்ஸ் 18 ரன்கள் எடுத்தபோது இஷாந்த் சர்மாவின் ஓவரில் எல்.பி.டபிள்யூ ஆனார். இது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இஷாந்த் சர்மாவின் 300 ஆவது விக்கெட் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2007 ஆம் ஆண்டு வங்கத்தேச அணிக்கு எதிராக தன்னுடைய முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை ஆடத் தொடங்கிய இஷாந்த் சர்மா இதுவரை 98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி தனது 300 ஆவது விக்கெட்டை வீழ்த்தி இருக்கிறார்.
இதன்மூலம் இந்தியாவிற்காக 300 விக்கெட்டுகளை டெஸ்ட் கிரிக்கெட்டில் வீழ்த்திய 6 ஆவது வீரர் என்ற வெற்றிச் சாதனையை படைத்து உள்ளார். மேலும் 3 ஆவது வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் பெற்று இருக்கிறார். இதற்கு முன்பு அஸ்வின் 54 போட்டிகளிலும் கும்ப்ளே 66 போட்டிகளிலும் ஹர்பஜன் 72 போட்டிகளிலும் கபில் 83 போட்டிகளிலும் ஜாகீர் கான் 89 போட்டிகளிலும் 300 டெஸ்ட் கிரிக்கெட் விக்கெட்டுகளை வீழ்த்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதோடு இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது இன்னிங்ஸ் போட்டியில் தமிழக வீரர் அஸ்வின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி மாஸ் காட்டினார். அதேபோல நதீம் 2 விக்கெட்டுகளையும் இஷாந்த் சர்மா மற்றும் ஜாஸ்பிரீத் பும்ரா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த அதிரடியும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றிருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments