தோனியின் மூளை எப்படி வேலை செய்கிறது? சுவாரசியமான ஆராய்ச்சியில் ஈடுபட்ட முக்கிய வீரர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியக் கிரிக்கெட்டில் முக்கிய ஜாம்பவனாக இருந்துவரும் மகேந்திரசிங் தோனியின் மனது எப்படி வேலை செய்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள அதிகமாக முயற்சித்து வருகிறேன் என்று இளம் வீரர் ஒருவர் சுவாரசியமான தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார். இந்தக் கருத்து ரசிகர்களிடையே வைரலாகப் பேசப்பட்டு வருகிறது.
இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாகவும் விக்கெட் கீப்பராகவும் அதேபோல ஐபிஎல் தொடருக்காக சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டனாகவும் இருந்துவந்த எம்.எஸ்.தோனியின் திறமையைக் கண்டு வியக்காத ரசிகர்களே இல்லை. இந்நிலையில் தற்போதைய 15 ஆவது சீசன் ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டிகளுக்கு இடையே வீரர்களிடம் பிரேக்ஃபாஸ்ட் வித் சாம்பியன்ஸ் எனும் பெயரில் நேர்காணல் நடத்தப்பட்டு இருக்கிறது.
இந்த நேர்காணலில் இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனாகவும் விக்கெட் கீப்பராகவும் இருந்துவரும் இஷான் கிஷன் கலந்து கொண்டுள்ளார். அப்போது நான் எம்.எஸ்.தோனியின் மனது எப்படி செயல்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்ள தீவிரமாக முயற்சித்து வருகிறேன். சொன்னால் நம்ப மாட்டீர்கள், நான் ஒரு ஐபிஎல் லீக் போட்டியின்போது பந்து வீச்சாளரின் பந்தை தெறிக்கவிட்டுக் கொண்டிருந்தேன். மாஹி பாய் அப்போது சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிரிடம் சென்று காதில் ஏதோ சொன்னார். உடனே தாஹிர் ஹாஃப் – வாலி பந்தை வீச, நான் அதை டிரைவ் அடிக்க முயன்றபோது ஷார்ட் தியேர்ட் மேனிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனேன்.
ஓரு ஸ்பின்னரை டிரைவ் செய்ய முயற்சித்து நான் எப்படி ஷார்ட் தியேர்ட் மேன்யிடம் சிக்கினேன் என்பதை இன்னமும் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அதை தோனி சரியாக கணித்தார். இதனால் தோனியின் மனது எப்படி செயல்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன் எனத் தெரிவித்துள்ளார். மேலும் கிரிக்கெட்டில் உள்ள நுணுக்கங்களை எல்லாம் புரிந்து கொள்ள விரும்புகிறேன் என்று இஷான் கிஷன் பேசியிருப்பது கிரிக்கெட் ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments