'அயலான்' ஒரு பான் - இந்தியா படமல்ல, பான் - வேர்ல்ட் படம்: சொன்னது யார் தெரியுமா?

சிவகார்த்திகேயன் நடிப்பில் ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உருவாகி வரும் திரைப்படம் ’அயலான்’. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது .

‘இன்று நேற்று நாளை’ படத்திற்கு பிறகு ரவிக்குமார் இயக்கும் இந்தப் படம் ஒரு சயின்ஸ் பிக்சன் படம் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படம் இந்தியாவில் தயாராகும் முதல் ஏலியன் படம் என்றும் கூறப்படுகிறது.

விஜயகாந்த் நடித்த ’நரசிம்மா’ படத்தில் நாயகியாக நடித்திருந்த இஷா கோபிகர் இந்த படத்தில் மிக முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில், ’அயலான்’ திரைப்படம் இந்தியாவில் உருவாகும் முதல் ஏலியன், சயின்ஸ் ஃபிக்சன் மற்றும் கிராபிக்ஸ் திரைப்படம் என்றும், இந்த படம் வேற லெவலில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இஷா கோபிகரின் இந்த பேட்டியை அடுத்து ’அயலான்’ திரைப்படம் ஒரு பான் இந்தியா திரைப்படம் அல்ல என்றும், பான் - வேர்ல்ட் திரைப்படம் என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத்திசிங், இஷா கோபிகர், யோகிபாபு, கருணாகரன், உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார் என்பது கேஜேஆர் ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.