ரஜினி குறித்த சர்ச்சைக்குரிய காட்சி" 'கோமாளி' பட தயாரிப்பாளரின் அதிரடி முடிவு
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜெயம் ரவி நடித்த 'கோமாளி' திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் அந்த படத்தில் ரஜினிகாந்த் குறித்த சர்ச்சைக்குரிய காட்சி ஒன்று இருப்பதை அறிந்த ரஜினி ரசிகர்கள் அந்த படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் கடும் கண்டனம் தெரிவித்தனர் என்பது தெரிந்ததே
கோமாளி திரைப்படத்தில் ரஜினிகாந்த் கடந்த 20 வருடங்களாக அரசியலுக்கு வருவதாக கூறி ஏமாற்றி வருவதை சுட்டிக் காட்டும் வகையில் ஒரு காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த காட்சியை 'கோமாளி' படத்தின் டிரைலரில் பார்த்த ரஜினி ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து இந்த படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் உரிய விளக்கம் அளித்த போதிலும் ரஜினி ரசிகர்கள் சமாதானம் அடையாமல் 'கோமாளி' படத்திற்கு தங்கள் எதிர்ப்பை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வந்தனர்.
இந்த நிலையில் ரஜினி ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று 'கோமாளி' படத்தில் ரஜினியை கேலி செய்த காட்சி நீக்கப்படும் என சற்றுமுன் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ரஜினி ரசிகர்கள் சமாதானம் ஆவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இது குறித்து நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பாளரை ஐசரி கணேஷை தொடர்பு கொண்டு தனது வருத்தத்தை தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
மொத்தத்தில் ரஜினி குறித்த காட்சியால் இந்த படத்திற்கு இலவச விளம்பரம் கிடைத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout