நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்பு கேட்ட ஐசரிகணேஷிடம் நீதிபதிகள் விடுத்த வேண்டுகோள்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை இன்று முடித்து வைத்த நீதிபதிகள், ஆதரவற்ற குழந்தைகளின் நலனுக்காக நன்கொடையாளர் என்ற முறையில் சட்டப் பணிகள் ஆணையத்திற்கு உதவும் படி நீதிபதிகள் ஐசரிகணேஷிடம் தெரிவித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட ஐசரி கணேஷ் ரூபாய் 10 லட்சம் ரூபாய் நன்கொடை தருவதாகவும், அந்தப் பணத்தை ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் திருநங்கைகள் நலனுக்காக பயன்படுத்திக்கொள்ளும்படியும் தெரிவித்தார்.
முன்னதாக நடிகர் சங்க தேர்தல் பாதுகாப்பு வழங்கக் கோரிய விஷால் தொடுத்த அவசர வழக்கை, அவசர வழக்காக விசாரிக்க வேண்டாம் என நீதிபதிகளிடம் ஐசரி கணேஷ் மற்றும் அனந்தராமன் அணுகியதாக தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து இருவர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் ஐசரி கணேஷ் மற்றும் அனந்தராமன் ஆஜராகி நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கை முடித்து வைப்பதாக தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com