பெங்களூர் விமான நிலையத்தில் இளையராஜாவுக்கு அவமரியாதையா? விரிவான தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
1000 திரைப்படங்களுக்கு இசையமைத்து உலக சாதனை படைத்த இசைஞானி இளையராஜா பெங்களூர் விமான நிலையத்தில் அவமரியாதை செய்யப்பட்டதாக சமூக இணையதளங்களில் பரபரப்பான செய்திகள் வெளிவந்துள்ளது.
இளையராஜா தனது குடும்பத்தினர்களுடன் மங்களூர் கோவில்களுக்கு சென்றுவிட்டு சென்னை திரும்ப பெங்களூர் விமான நிலையத்திற்கு வந்ததாகவும், அங்கிருந்த விமான நிலைய அதிகாரிகள் இளையராஜாவின் உடைமைகளை சோதனை செய்தபோது அதில் உடைத்த தேங்காய் உள்பட பிரசாத பொருட்கள் இருந்ததாகவும் அதை அனுமதிக்க முடியாது என விமான நிலைய அதிகாரிகள் கூறியதாகவும் தெரிகிறது.
இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகளுக்கும் இளையராஜா தரப்புக்கும் வாக்குவாதம் நடைபெற்றதாகவும் பின்னர் உயரதிகாரிகள் தலையிட்டு பிரச்சனையை சுமூகமாக முடித்து வைத்ததோடு இளையராஜாவிடம் வருத்தம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் காரணமாக இளையராஜா பயணம் செய்ய இருந்த விமானம் தாமதமாக கிளம்பியது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com