பெங்களூர் விமான நிலையத்தில் இளையராஜாவுக்கு அவமரியாதையா? விரிவான தகவல்

  • IndiaGlitz, [Tuesday,June 07 2016]

1000 திரைப்படங்களுக்கு இசையமைத்து உலக சாதனை படைத்த இசைஞானி இளையராஜா பெங்களூர் விமான நிலையத்தில் அவமரியாதை செய்யப்பட்டதாக சமூக இணையதளங்களில் பரபரப்பான செய்திகள் வெளிவந்துள்ளது.

இளையராஜா தனது குடும்பத்தினர்களுடன் மங்களூர் கோவில்களுக்கு சென்றுவிட்டு சென்னை திரும்ப பெங்களூர் விமான நிலையத்திற்கு வந்ததாகவும், அங்கிருந்த விமான நிலைய அதிகாரிகள் இளையராஜாவின் உடைமைகளை சோதனை செய்தபோது அதில் உடைத்த தேங்காய் உள்பட பிரசாத பொருட்கள் இருந்ததாகவும் அதை அனுமதிக்க முடியாது என விமான நிலைய அதிகாரிகள் கூறியதாகவும் தெரிகிறது.

இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகளுக்கும் இளையராஜா தரப்புக்கும் வாக்குவாதம் நடைபெற்றதாகவும் பின்னர் உயரதிகாரிகள் தலையிட்டு பிரச்சனையை சுமூகமாக முடித்து வைத்ததோடு இளையராஜாவிடம் வருத்தம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் காரணமாக இளையராஜா பயணம் செய்ய இருந்த விமானம் தாமதமாக கிளம்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'கபாலி' இசைவெளியீட்டு விழாவில் திடீர் மாற்றமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'கபாலி' படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 12ஆம் தேதி நடைபெறும்...

'இறைவி' பிரச்சனை குறித்து ஞானவேல்ராஜா கருத்து

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'இறைவி' திரைப்படத்தில் தயாரிப்பாளர்களை அவமதிக்கும் வகையில் கருத்து கூறப்பட்டிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில் இயக்குனர்...

'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' சென்சார் தகவல்கள்

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் நடித்த 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' திரைப்படம் வரும் 17ஆம் தேதி ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டுள்ள...

சூர்யாவின் 'சிங்கம் 3' கிளைமாக்ஸ்

சூர்யா நடிப்பில் ஹரி இயக்கி வரும் சிங்கம் 3' என்ற 'எஸ் 3' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்...

'கபாலி'யின் தெலுங்கு ரிலீஸ் வியாபாரம் குறித்த தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தின் கன்னட ரிலீஸ் உரிமையை 'லிங்கா' தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் மிகப்பெரிய தொகை கொடுத்த பெற்றுள்ளார்...