லதா மங்கேஷ்கர் மறைவு குறித்து இசைஞானியின் உருக்கமான இரங்கல் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
பழம்பெரும் பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் அவர்கள் கடந்த சில நாட்களாக உடல் நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார் என்ற செய்தி வெளியானதை ஏற்கனவே பார்த்தோம். லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்பட பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து இருந்தனர். அதேபோல் ஒட்டுமொத்த திரையுலகமும் லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இசைஞானி இளையராஜா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘இந்திய திரைப்பட இசை உலக வரலாற்றில் கடந்த அறுபது எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுடைய தெய்வீகக் குரலால் உலக மக்களை எல்லாம் மயக்கி தன் வசத்தில் வைத்திருந்த லதா மங்கேஷ்கர் அவர்கள் மறைவு என்னுடைய மனதில் ஆழ்ந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வேதனையை எப்படி போக்குவேன் என்பது எனக்கு தெரியவில்லை.
அவருடைய இழப்பு இசை உலகிற்கு மட்டுமல்ல, இந்த உலகிற்கே மாபெரும் இழப்பாகும் என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். அவரை இழந்து தவிக்கும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக ஆஷா அவர்களுக்கும், உஷா மங்கேஷ்கர் அவர்களுக்கும் என்னுடைய தனிப்பட்ட முறையிலான அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்’. இவ்வாறு இசைஞானி இளையராஜா இந்த வீடியோவில் கூறியுள்ளார்.
May she rest in peace & light up the heavens with her soulful voice.. pic.twitter.com/yz2AJVevhq
— Ilaiyaraaja (@ilaiyaraaja) February 6, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments