பிரபல பெண் இயக்குனரின் அடுத்த படத்தில் இணைந்த இசைஞானி இளையராஜா!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல பெண் இயக்குனரின் அடுத்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
பல தமிழ் திரைப்படங்களில் குணச்சித்திர கேரக்டரில் நடித்த நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ஒரு இயக்குனர் என்பதும் தெரிந்ததே. ‘ஆரோகணம்’ என்ற படத்தை கடந்த 2012ஆம் ஆண்டு இயக்கிய லட்சுமி ராமகிருஷ்ணன் அதன்பின் ’நெருங்கி வா முத்தமிடாதே’ ’அம்மணி’ மற்றும் ’ஹவுஸ் ஓனர்’ ஆகிய திரைப்படங்களை இயக்கினார்
இந்த நிலையில் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தற்போது ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தில் அம்மு அபிராமி, மிஷ்கின், ரோபோ சங்கர் உள்பட பலர் நடித்து வருகின்றனர்
இந்த நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளராக இளையராஜா இணைந்ததாக லட்சுமி ராமகிருஷ்ணன் அறிவித்துள்ளார். இளையராஜா எங்கள் படத்தில் இணைந்தது ஆசீர்வதிக்கப்பட்ட ஒன்றாக கருதுகிறோம் என்றும், அவருடன் பணிபுரிந்தது மிகப்பெரிய அனுபவம் என்றும் தற்போது பின்னணி இசை பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் பதிவு செய்துள்ளார். மேலும் இசைஞானி இளையராஜாவுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments