புத்தாண்டு தினத்தில் உலகப்புகழ் பெற்ற கோவிலில் தரிசனம் செய்த இசைஞானி!

இசைஞானி இளையராஜா இன்றைய புத்தாண்டு தினத்தில் உலகப் புகழ்பெற்ற கோவிலில் தரிசனம் செய்த காட்சியின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிபிடத்தக்கது.

இசைஞானி இளையராஜா நேற்று தனது ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்கும் வகையில் தனது சமூக வலைத்தளத்தில் ’இளமை இதோ இதோ’ என்ற பாடலை பாடினார் என்பதும் அது குறித்த வீடியோ மிகப்பெரிய அளவில் வைரலானது என்பதும், இந்த வீடியோவுக்கு கமல்ஹாசன் உள்பட பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று உலகம் முழுவதும் 2022 ஆம் ஆண்டின் புத்தாண்டை வரவேற்று கொண்டாடி வரும் நிலையில் இசைஞானி இளையராஜா அவர்கள் இன்று உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தார். அவர் கோவிலில் தரிசனம் செய்து விட்டு வெளியே வரும் காட்சிகளின் புகைப்படங்களை இணையதளத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இசைஞானி இளையராஜா தற்போது வெற்றிமாறனின் ‘விடுதலை’, மிஷ்கினின் ‘துப்பறிவாளன் 2’, விஜய் ஆண்டனியின் ‘தமிழரசன்’, சிபிராஜின் ‘மாயோன்’ உள்பட சுமார் 20 படங்களுக்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.