செங்கோல் சரியான இடத்துக்கு வந்திருக்கிறது: இசைஞானி இளையராஜா
Send us your feedback to audioarticles@vaarta.com
புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் இன்று வைக்கப்பட்டுள்ள செங்கோல் குறித்து இசைஞானி இளையராஜா கூறிய போது ’செங்கோல் சரியான இடத்திற்கு திரும்ப வந்திருக்கிறது’ என்று கூறியுள்ளார்.
இன்று டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இரண்டு கட்டங்களாக இந்த கட்டிட திறப்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த கட்டிட திறப்பு விழாவுக்கு வாழ்த்து தெரிவித்து இசைஞானி இளையராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ’பிரதமர் நரேந்திர மோடி புதிய பாராளுமன்ற கட்டிடத்தை இன்று திறந்து வைக்கிறார். ஒரு குடிமகனாகவும் எம்பியாகவும் இந்த புதிய கட்டிட திறப்பு விழாவை மகிழ்ச்சியுடனும் ஆவலுடனும் எதிர்பார்த்து காத்திருக்கின்றேன். குறுகிய காலத்தில் கட்டி முடிக்கப்பட்ட இந்த கட்டிடத்தை கட்டி முடிக்க துணை புரிந்த பிறகு மோடி மற்றும் மத்திய அரசு ஊழியர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் உலகமே புதிய இந்தியாவை கொண்டாடும் இந்த நேரத்தில் இந்த புதிய கட்டிடம் திறக்க இருப்பதை நான் மனதார பாராட்டுகிறேன். பழங்கால தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் பெருமை கொண்ட செங்கோலை அரச குடும்பத்தினர் வெற்றிகரமாக கையில் ஏந்தி ஆட்சி செய்தனர். நீதி, ஒழுங்கு, நேர்மை மற்றும் நெறிமுறைகளின் அடையாளமாக செங்கோலை போற்றினர். இத்தகைய செங்கோல் தற்போது சரியான இடத்திற்கு திரும்ப வந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது’ என்று இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார்.
#MyParliamentMyPride @narendramodi @PMOIndia #NewParliamentBuilding pic.twitter.com/SXhaAiymVc
— Ilaiyaraaja (@ilaiyaraaja) May 27, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments