'சூப்பர்மேன்' பார்ட் 2 வரும்போது, இசை வரக்கூடாதா? இளையராஜாவின் இனிப்பான அறிவிப்பு

  • IndiaGlitz, [Sunday,February 20 2022]

’சூப்பர்மேன்’ போன்ற படங்கள் எல்லாம் இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம் வரும் போது இசை ஏன் வரக்கூடாது என்ற எண்ணம் தனக்கு தோன்றியதாக இசைஞானி இளையராஜா ஒரு இனிப்பான அறிவிப்பை அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் கூறியபோது, ‘திரைப்படங்களில் இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம் என்று வெளியாகிக் கொண்டிருக்கிறது. உதாரணத்திற்கு சூப்பர்மேன், சூப்பர்மேன் 2, சூப்பர்மேன் 3 எனவும், அதேபோல் பேட்மேன், பேட்மேன் 2, பேட்மேன் 3 என வெளியாகிறது.அதேபோல் ஏன் இசையில் அடுத்தடுத்த பாகங்கள் வரக்கூடாது என்ற ஒரு கேள்வி எனக்கு ஏற்பட்டது. அதுதான் ’ஹவ் டு நேம் இட் பார்ட் 2’ விரைவில் வரப்போகிறது என்று இசைஞானி தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு இசை பிரியர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 1986 ஆம் ஆண்டு இசைஞானி இளையராஜா கம்போஸ் செய்த மியூசிக் ஆல்பம் ’ஹவ் டு நேம் இட்’. 10 பாடல்கள் அடங்கிய இந்த மியூசிக் ஆல்பம், இசை மேதை தியாகராஜர் மற்றும் மேற்கிந்திய இசை மேதை ஜே.எஸ்.பேச் ஆகியோர்களுக்கு அர்ப்பணம் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டது. இந்தியன் - வெஸ்டர்ன் பாணியில் உருவான இந்த இசை ஆல்பம் 48 நிமிடங்கள் கொண்டது என்பதும், இந்த இசை ஆல்பம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் 36 வருடங்கள் கழித்து ’ஹவ் டு நேம் இட்’ இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக இசைஞானி அறிவித்துள்ளது இசை ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

More News

ரஜினிகாந்த் படத்தை தயாரிக்கவிருப்பது உண்மையா? போனிகபூர் விளக்கம்!

பிரபல பாலிவுட் இயக்குனரும் அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' 'வலிமை' போன்ற படங்களை தயாரித்தவருமான போனிகபூர் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை தயாரிக்க இருப்பதாகவும்

பிரபல தமிழ் இயக்குனரின் இயக்கத்தில் தல தோனி: மாஸ் அறிவிப்பு

தல தோனி எனது இயக்கத்தில் நடிக்க இருக்கும் அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று பிரபல இயக்குனர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளதை அடுத்து தோனி ரசிகர்கள்

'வலிமை' படத்தை ஓடிடியில் ஏன் வெளியிடவில்லை: தயாரிப்பாளர் போனிகபூர்

அஜித் நடித்த 'வலிமை' திரைப்படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய பல ஆஃபர்கள் வந்ததாகவும் ஆனால் படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய தான் விரும்பவில்லை என்றும் அவர் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில்

நடிகை த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்ட பிக்பாஸ் பிரியங்கா: ஏன் தெரியுமா?

விஜய் டிவியின் தொகுப்பாளினியும், பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான பிரியங்காவுக்கு நடிகை த்ரிஷா தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

ரஜினியின் அடுத்த படத்தை தயாரிக்கும் போனிகபூர்? இயக்குனர் யார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 169வது படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், நெல்சன் இயக்க இருப்பதாகவும்,