80 வயது.. 47 வருட இசைப்பயணம்.. இன்றும் 8 படங்களில் பிசியாக இருக்கும் இசைஞானி இளையராஜா..!

  • IndiaGlitz, [Tuesday,September 05 2023]

இசைஞானி இளையராஜா கடந்த 47 ஆண்டுகளாக திரையுலகில் இசை அமைத்து வருகிறார் என்பதும் ஆயிரம் படங்களுக்கு மேல் இசை அமைத்து கின்னஸ் சாதனை புரிந்துள்ளார் என்பது தெரிந்ததே.

தற்போது ஏஆர் ரகுமான், அனிருத் உட்பட பல இளம் இசையமைப்பாளர்கள் முன்னணி நடிகர்களுக்கு இசையமைத்தாலும் இன்னும் இசைஞானி இளையராஜா பிசியாக தான் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தற்போது 8 படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

பிரபல மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா தானே இசையமைத்து வருகிறார். இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இதனை அடுத்து பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் பாரதிராஜா நடிப்பில் சுசீந்திரன் தயாரிப்பில் உருவாகி வரும் ’மார்கழி திங்கள்’ இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா தான் இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ராமகிருஷ்ணா என்பவரின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சதனா’ என்ற திரைப்படத்திற்கும் இசைஞானி இளையராஜா தான் இசையமைத்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் உருவாகி வரும் 'படைத்தலைவன்’ திரைப்படத்திற்கும் இசைஞானி இளையராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தை அன்பு என்பவர் இயக்கி வருகிறார்.

இதையடுத்து அஜயன்பாலா என்பவரின் இயக்கத்தில் உருவாகி வரும் ’மைலாஞ்சி’ என்ற திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து வருகிறார்.

மேலும் ஜெயப்பிரகாஷ் என்பவர் இயக்கத்தில் கௌரி கிஷான், வெற்றி மற்றும் பிரணவ் நடிப்பில் உருவாகி வரும் ’உலகம்மை’ என்ற திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து வருகிறார்.

இதையடுத்து இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் சமுத்திரக்கனி முக்கிய வாரத்தில் நடித்துவரும் ’ஆர் யூ ஓகே பேபி’ என்ற படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார் என்பதும் இந்த படம் செப்டம்பர் 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோக ஒரு தெலுங்கு படத்திற்கும் இளையராஜா இசையமைத்து வருகிறார் என்பதும் இந்த படத்தில் ரெஜினா, அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.