தமிழகத்தையும், தமிழ் மக்களையும் கௌரவித்த விருது: பத்மவிபூஷன் குறித்து இளையராஜா
Send us your feedback to audioarticles@vaarta.com
இசைஞானி இளையராஜா அவர்களுக்கு 2017ஆம் ஆண்டிற்கான பத்மவிபூஷன் விருது சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இசைஞானிக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
நாளை குடியரசு தினம் கொண்டாடப்படவுள்ளதை அடுத்து பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கான பத்மவிருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்மவிபூஷண் விருது வழங்கப்பட உள்ளது.
தனக்கு கிடைத்த விருது குறித்து இசையமைப்பாளர் இளையராஜா கூறியபோது, 'பத்ம விபூஷண் விருது பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. மத்திய அரசு என்னை கௌரவித்ததாக கருதவில்லை; தமிழகத்தையும், தமிழ் மக்களையும் கௌரவித்ததாக கருதுகிறேன்' என்று கூறியுள்ளார்
ஏற்கனவே இளையராஜா அவர்கள் கடந்த 2010ஆம் ஆண்டு நாட்டின் மூன்றாவது உயரிய விருதான பத்மபூஷன் விருதினை பெற்றுள்ள நிலையில் தற்போது அவர் நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்மவிபூஷன் விருதினை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments