இசைஞானி இளையராஜாவுக்கு கிடைத்த மிகப்பெரிய பதவி: பிரதமர் மோடி வாழ்த்து!
Send us your feedback to audioarticles@vaarta.com
பாராளுமன்றத்தின் நியமன எம்பியாக இசைஞானி இளையராஜா தேர்வு செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்
கலை, இலக்கியம், சமூக சேவை, விளையாட்டு, சட்டம் போன்ற பல்வேறு தொழில் துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ராஜ்யசபா எம்பி பதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது ராஜ்யசபாவுக்கு நியமன எம்பியாக இசைஞானி இளையராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கிய பிடி உஷா மற்றும் வீரேந்திர ஹெக்டே, கேவி விஜயேந்திர பிரசாத் ஆகியோருக்கும் ராஜ்யசபா எம்பி பதவி வழங்கப்பட்டுள்ளது
நியமன ராஜ்யசபா எம்பி பதவி கொடுக்கப்பட்டுள்ளதை அடுத்து இசைஞானி இளையராஜாவுக்கு பிரதமர் மோடி தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: படைப்பு மேதை இளையராஜா அவர்கள் தலைமுறை தலைமுறையாக மக்களை கவர்ந்தவர். அவரது படைப்புகள் பல உணர்வுகளை அழகாக பிரதிபலிக்கின்றன. அவரது வாழ்க்கைப் பயணம் அனைவருக்கும் ஊக்கமளிக்கிறது. எளிமையான பின்னணியில் இருந்து உயர்ந்து அவர் பல சாதனைகளை செய்துள்ளார். அவருக்கு ராஜ்யசபா நியமன எம்பி பதவி கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் பிரதமர் மோடியையும் சட்டமேதை அம்பேத்கரையும் ஒப்பிட்டு இசைஞானி இளையராஜா ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
I express my sincere gratitude for the thoughts @narendramodi ji
— Ilaiyaraaja (@ilaiyaraaja) July 6, 2022
It is a honour and opportunity to make the beauty of music, art and culture reach the length and breadth of our society. https://t.co/2vI2sVXxmk
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments