மோடியின் ஆட்சியை பார்த்தால் அம்பேத்காரே பெருமைப்படுவார்: இசைஞானி இளையராஜா
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரதமர் மோடியின் ஆட்சியை தற்போது அம்பேத்கார் பார்த்தால் அவரே பெருமைப்படுவார் என நிகழ்ச்சி ஒன்றில் இசைஞானி இளையராஜா பேசியுள்ளார் .
மோடியும் அம்பேத்காரும் என்ற புத்தகம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த புத்தகத்திற்கு முன்னுரை எழுதிய இளையராஜா இந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியபோது ’பிரதமர் மோடியின் தலைமையிலான அரசின் கீழ் நாடு வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும், அனைத்து துறைகளிலும் முன்னேறிக் கொண்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்..
இந்தியாவின் உள்கட்டமைப்பு மிகச்சிறப்பாக அமைக்கப்பட்டு வருவதாகவும் சமூக நீதி விஷயத்திலும் பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் பட்டியலிட்டார். குறிப்பாக முத்தலாக் உள்ளிட்ட சட்டத்தை இயற்றியதன் மூலம் பெண்கள் வாழ்வில் மாற்றத்தை பிரதமர் மோடி ஏற்படுத்தி உள்ளார் என்றும் இதனை கண்டு அம்பேத்காரே பெருமைப்படுவார் என்றும் இளையராஜா கூறியுள்ளார்.
அம்பேத்கர் மற்றும் மோடி ஆகிய இருவருமே ஏழ்மையின் ஒடுக்குமுறையை அனுபவித்தவர்கள் என்பதால் அந்த ஏழ்மையை ஒழிக்க பாடுபட்டவர்கள் என்றும் இந்தியாவின் மீது மிகப்பெரிய கனவுகளை கண்டு அதன் செயல்பாடுகளை செய்து கொண்டு வருபவர் மோடி என்றும் இளையராஜா கூறினார். இளையராஜாவின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments