பிக்பாஸ் வீட்டில் வைல்ட்கார்ட் எண்ட்ரி உண்டா? இல்லையா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் ஏற்கனவே அர்ச்சனா மற்றும் சுசித்ரா ஆகிய இருவர் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக வந்து விட்ட நிலையில் அஜிம் மற்றும் விஜே மகேஸ்வரி ஆகிய இருவரும் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. மேலும் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி 63 நட்கள் இன்றுடன் முடிந்துள்ள நிலையில் இன்னும் ஒரு சில வாரங்களே மீதமிருக்கும் நிலையில் இனிமேல் வைல்ட்கார்ட் எண்ட்ரி வர வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது.

பிக்பாஸ் முதல் சீசனில் ஏழாவது வாரத்தில் சுஜா வைல்ட்கார்ட் எண்ட்ரியாக வந்தார். அதேபோல் பிக்பாஸ் இரண்டாவது சீசனில் விஜயலட்சுமி 9-வது வாரத்தில் வைல்ட்கார்ட் எண்ட்ரியாகவும், மூன்றாவது சீஸனில் கஸ்தூரி ஆறாவது வாரத்தில் வைல்ட்கார்ட் எண்ட்ரியாகவும் வந்தனர்.

எனவே இதுவரை அதிகபட்சமாக 9வது வாரத்திற்கு பிறகு வைல்ட்கார்ட் எண்ட்ரி என்று யாரும் பிக்பாஸ் வீட்டிற்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 9 வாரங்கள் முடிந்துவிட்ட நிலையில் நேற்று வரை வைல்ட்கார்ட் எண்ட்ரி என யாரும் வரவில்லை என்பதால் இனிமேலும் அதாவது நிகழ்ச்சி முடிவடைய இன்னும் சுமார் ஐந்தாறு வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இனி வைல்ட்கார்ட் எண்ட்ரி வருவது சந்தேகமே என்று கூறப்படுகிறது.