தோல், முடி பிரச்சனைக்கு வைட்டமின் 'இ' மாத்திரைகள் நல்லதா? மருத்துவர்கள் விளக்கம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
அழகான சருமத்திற்கும் அடர்த்தியான கேசத்திற்கு வைட்டமின் ‘இ’ மாத்திரைகளைப் பயன்படுத்துங்கள் என்பது போன்ற பரிந்துரைகள் சமூகவலைத் தளத்தில் அதிகரித்து விட்டன. மேலும் உடல் சோர்வாக இருக்கிறது என்பது போன்ற காரணங்களைச் சொல்லிக்கொண்டு சுயமாகவே இந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது.
இந்நிலையில் வைட்டமின் ‘இ’ மாத்திரைகளை யார் எடுத்துக்கொள்ள வேண்டும்? எவ்வளவு காலம் எடுத்துக்கொள்ள வேண்டும்? அதில் நன்மைகள் இருக்கிறதா? என்பதுபோன்ற விளக்கங்கள் பலருக்கும் தெரிந்திருக்கவில்லை. அதுகுறித்த ஒரு தொகுப்பு.
வைட்டமின் ‘இ’ மாத்திரை நன்மைகள்
உண்மையில் வைட்டமின் ‘இ’ மாத்திரைகள் என்பது கொழுப்பில் கரையக்கூடியது என்பதால் உணவிற்குப் பின்பு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஆனால் வியந்து கூறும் அளவிற்கு அனைத்து வியாதிகளுக்கும் முழுமையான பலனைக் கொடுக்கும் என்று கூறுவது மருத்துவத் துறையில் நிரூபிக்கப்படவில்லை.
குறிப்பாக புற்றுநோயைத் தடுப்பதில் அல்லது சிகிச்சை அளிப்பதில் உதவியாக இல்லை என்பதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்.
வைட்டமின் ‘இ’ ஆக்ஸிஜனேற்ற பண்புகளுடன் இருப்பதால் உடலில் உள்ள செல் சேதத்தைக் குறைத்து முடி வளர்ச்சியை மேம்படுத்துகிறது.
இரசாயனங்களினாலும் வெப்பம் போன்ற பிற பொருட்களினாலும் தோலில் ஏற்படும் சேதத்தை தடுக்க வைட்டமின் ‘இ’ மாத்திரைகள் முழுமையாகப் பயன்படுகின்றன.
ஆனால் வைட்டமின் ‘இ’ மாத்திரைகள் எந்த விதத்திலும் இதயம், ரத்த நாளத்திற்கு பலனைத் தரும் என்று கூறுவதில் உண்மையில்லை என்று கடந்த 2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒரு ஆய்வில் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பால் உற்பத்தியாளர்கள் அதன் பளபளப்பை கூட்டுவதற்காக வைட்டமின் ‘இ’ மாத்திரைகளைப் பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை இந்த வைட்டமின் ‘இ’ மாத்திரைகளில் காணப்படுகிறது.
இது இரத்த நாளங்களை விரிவுப்படுத்துகிறது. மேலும் இரத்தக் கட்டிகளைத் தடுக்கும் ஆற்றலையும் கொண்டிருக்கிறது.
வைட்டமின் ‘இ’ மாத்திரைகள் முக்கியமாக செல் செயல்பாட்டை ஊக்குவித்து தோலில் பளபளப்பு தன்மையைப் பராமரிக்க உதவுகின்றன.
செயற்கை ராசாயனம், மாசுபாடு போன்ற சேதத்தின் விளைவாக முடி கொட்டும்போது அதிலிருந்து வெளிவர வைட்டமின் ‘இ’ முழுமையாகப் பயன்படுகின்றன.
பின்விளைவுகள்
அடிக்கடி வைட்டமின் ‘இ’ மாத்திரைகளை தோலில் நேரடியாக பயன்படுத்தும்போது சிலருக்கு ஒவ்வாமை வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அதேபோல வீக்கம், கண்களில் எரிச்சல், புண்கள் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.
வைட்டமின் ‘இ’ மாத்திரைகளை முகத்திற்கு நேரடியாகப் பயன்படுத்தும்போது முதலில் பளபளப்பு தன்மை ஏற்படுவது போல தோன்றலாம். ஆனால் இதுவே ஒருசிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி தோலில் தடிப்பு தன்மையையும் ஏற்படுத்து விடுகிறது.
மேலும் ஒருசிலருக்கு இந்த வைட்டமின் ‘இ’ மாத்திரைகள் சருமத்தில் உணர் திறன் பிரச்சினைகளை உண்டாக்கி விடுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
கவனிக்க வேண்டியவை
வளர்ச்சி மற்றும் நல்ல ஆரோக்கியத்திற்கு வைட்டமின்கள் தேவை. ஆனால் முடிந்த அளவிற்கு இந்த வைட்டமின் ‘இ’ சத்துகளை உணவின் மூலம் பெறுவதையே மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
மேலும் சுயமாக இந்த வைட்டமின் ‘இ’ மாத்திரைகளை எடுத்துக்கொள்ளாமல் மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற்று பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.
வேறு மருந்துகளை எடுத்துவரும் நோயாளிகள், கர்ப்பிணிகள், குழந்தைகள், ஒவ்வாமை குறைபாடு உள்ளவர்கள் இந்த வகையான வைட்டமின் ‘இ’ மாத்திரைகளை எடுக்கும்போது மருத்துவ ஆலோசனை கட்டாயம். தங்களுக்கு இருக்கும் குறைபாடுகளை மருத்துவர்களிடம் தெரிவித்து வேண்டியதும் அவசியம்.
வைட்டமின் ‘இ’ உணவுகள்
சப்ளிமெண்ட்ஸ் (மாத்திரைகளாக) வைட்டமின் ‘இ’ எடுத்துக் கொள்ளும்போது ஆரோக்கியத்தில் தீங்கு விளைவிக்கலாம்.
கீரைகள், கொட்டைகள் மற்றும் விதைகள், தாவர எண்ணெய், ப்ரோக்கோலி போன்ற பச்சை காய்கறிகள், மாம்பழம் மற்றும் கிவி போன்ற பழங்கள், தானியங்கள் உணவுகள், கோதுமை, நட்ஸ் போன்றவற்றில் இயற்கையாக வைட்டமின் ‘இ’ சத்துகள் நிறைந்திருக்கின்றன.
வைட்டமின் ‘இ’ எவ்வளவு உட்கொள்ள வேண்டும்?
தேசிய சுகாதார நிறுவனங்கள் கொடுத்துள்ள அறிக்கையின்படி ஒரு நபர் ஒரு நாளைக்கு 15 மில்லிகிராம் அளவிற்கு மட்டும் வைட்டமின் ‘இ’ மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதுவே இயற்கைப் பொருட்களில் வைட்டமின் ‘இ’ சத்துகள் இருந்தாலும் 1,000 மில்லிகிராமைத் தாண்டி எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments