விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டதா? பரபரப்பு தகவல்!
- IndiaGlitz, [Thursday,November 05 2020]
அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது என்பது தெரிந்ததே. முதுபெரும் அரசியல்வாதிகளான கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவரும் இல்லாத முதல் தேர்தல் என்பதால் இந்த தேர்தலில் வெற்றி யாருக்கு என்பதை பழம்பெரும் அரசியல் விமர்சகர்கள் கணிக்க முடியாத அளவில் உள்ளன
மேலும் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவரும் இந்த தேர்தலில் களத்தில் குதிக்க உள்ளனர் என்பதால் மக்களின் மனநிலையை கண்டுபிடிக்க முடியாத வகையில் உள்ளது. இந்த நிலையில் நடிகர் விஜய் விரைவில் அரசியலில் குதிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இதுகுறித்து சமீபத்தில் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் கூட பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது நடிகர் விஜய் கட்சி தொடங்கவிருப்பதாகவும், அவரது ரசிகர் மன்றமான அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் என்ற இயக்கம் அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் சில நிமிடங்களாக ஊடகங்கள், சமூக வலைத்தளங்களில் செய்தி வைரலானது. ஆனால் இந்த தகவலில் உண்மை இல்லை என்று விஜய் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
#BREAKING: அரசியல் கட்சி தொடங்குகிறார் நடிகர் விஜய்
— RIAZ K AHMED (@RIAZtheboss) November 5, 2020
* கட்சியின் பெயரை, தலைமை தேர்தல்
ஆணையத்தில் பதிவு செய்தார் விஜய் என்ற செய்தி தவறானது
The news spreading about " #ThalapathyVijay political party registered today " is untrue pic.twitter.com/sLrxqBNmiz