விஜய் எப்பொழுது அரசியலில் ஈடுபடுவார் ? எஸ்.ஏ.சி

  • IndiaGlitz, [Tuesday,April 10 2018]

தளபதி விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாக அவரது ரசிகர்கள் சமூக  வலைத்தளங்கள் மூலம் தங்கள் விருப்பத்தை தெரிவித்து கொண்டிருக்கும் நிலையில் ஒரு தந்தையாக விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்று தான் விரும்பியதாக இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார்.

இயக்குனர் எஸ்.ஏ.சி நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், 'ஒரு காலகட்டத்தில் விஜய் அரசியலுக்கு வந்தால் நல்லது என்று ஒரு தந்தையாக விரும்பினேன். ஆனால் தற்போது அவரை விட சீனியர் நடிகர்கள் எல்லாம் அரசியலுக்கு வந்துவிட்டார்கள். இந்த நேரத்தில் விஜய்யும் அரசியலுக்கு வந்தால் அது மக்களின் பார்வையில் கேலிக்கூத்தாகிவிடும் என்பதால் இன்றைய சூழ்நிலையில் விஜய் அரசியலுக்கு வருவது சரியல்ல என்பது எனது அபிப்பிராயம்

ஆனால் அதே நேரத்தில் விஜய் தற்போது சொந்தமாக முடிவெடுக்கும் பக்குவத்தை அடைந்துவிட்டார். எது நல்லது, எது கெட்டது, எதை செய்யக்கூடாது  எதை செய்யலாம் என்று அவருக்கு தெரியும். எனவே அரசியல் குறித்து அவர் என்ன முடிவெடுப்பார் என்று எனக்கு தெரியாது' என்று கூறினார். 

More News

'இது அன்பால சேர்ந்த கூட்டம், அழிக்க முடியாது: சிஎஸ்கே வீரரின் தமிழ் டுவீட்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துவிட்டாலே தன்னாலே தமிழ் உணர்வும், தமிழ் டுவீட்டும் வீரர்களிடையே வந்துவிடும் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

200 தொகுதிகளில் நடிகர்கள் கட்சி வெற்றி பெறும்: எஸ்.ஏ.சந்திரசேகர்

அனைத்து நடிகர்களும் ஒன்றிணைந்து ஒரு கட்சியை ஆரம்பித்தால், அந்த கட்சி உறுதியாக 200 தொகுதிகளை கைப்பற்றும் என்று எஸ்.ஏ.சந்திரசேகர் கூறினார்.

ரன்வீர்சிங், அனுஷ்கா ஷர்மாவுக்கு அறிவிக்கப்பட்ட விருதுகளில் குழப்பம்

பத்மாவத் படத்தில் அலாவுதீன் கில்ஜியாக நடித்த ரன்வீர்சிங்கிற்கு தாதா சாகிப் பால்கே எக்ஸலன்ஸ் என்ற விருதினை தனியார் அமைப்பு ஒன்று அறிவித்துள்ளது.

சேப்பாக்கம் மைதானத்தில் பாம்புகள்: வேல்முருகன் திடுக்கிடும் தகவல்

மலைவாழ் மக்கள் நூற்றுக்கணக்கான நாகப்பாம்புகளை மலையில் இருந்து பிடித்து வந்து சேப்பாக்கம் மைதானத்தில் விட திட்டமிட்டுள்ளதாக வேல்முருகன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கோடை மழை! வெதர்மேன் என்ன சொல்கிறார்

கோடை வெயில் தமிழகம் முழுவதும் கொளுத்தி கொண்டு வரும் நிலையில் தமிழகத்தில் ஆங்காங்கே கோடைமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.