வரலட்சுமியின் வருங்கால கணவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதா? 15 வயதில் மகள் இருக்கிறாரா?
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை வரலட்சுமி மற்றும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலை சச்தேவ் என்பவருக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்ததாக நேற்று புகைப்படங்களுடன் கூடிய தகவல் வெளியான நிலையில் வரலட்சுமியின் வருங்கால கணவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 15 வயதில் குழந்தை இருப்பதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நடிகை வரலட்சுமி கடந்த 14 ஆண்டுகளாக நிக்கோலை சச்தேவ் என்பவர் உடன் பழகி வந்த நிலையில் தற்போது இரு வீட்டார் சம்மதத்துடன் மார்ச் 1ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மற்றும் கலந்து கொண்டதாகவும் நேற்று செய்தி வெளியானது. மேலும் திருமணம் நிச்சயதார்த்தம் குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வரலட்சுமியின் வருங்கால கணவர் நிக்கோலைக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 15 வயதில் ஒரு மகள் இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இவரது முதல் மனைவி கவிதா Mrs Gladrags 2010 என்ற பட்டத்தை வென்றுள்ளார். அதேபோல் கலிபோர்னியாவில் கடந்த 2007 ஆம் ஆண்டு நடந்த Mrs Globe 2011 என்ற அழகி போட்டியிலும் பங்கேற்றுள்ளார்.
இந்நிலையில் நிக்கோலாவை கவிதா திருமணம் செய்து கொண்ட நிலையில், அடுத்த ஆண்டு இந்த தம்பதிக்கு ஒரு மகள் பிறந்ததாகவும், தற்போது 15 வயதாகும் அவரது மகள் பளு தூக்கும் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்று இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக நிக்கோலை மற்றும் கவிதா பிரிந்த நிலையில் தான் வரலட்சுமி உடன் நிக்கோலைவுக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com