கிரிக்கெட் ஜாம்பவானுக்கே இந்த கதியா??? இன வேறுபாட்டுக்கு எதிராக விளாசும் டேரன் சமி!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதும் இன வேறுபாட்டுக்கு எதிராகக் குரல் எழுப்பப்பட்டு வருகிறது. அமெரிக்க இளைஞர் ஜார்ஜ் ஃபிளாய்ட் போலீஸ் காவலில் இறந்த சம்பவம் உலகம் முழுவதும் கறுப்பினத்தவர் உரிமைகளைப் பற்றிய விவாதத்தினை கிளப்பியது. அதையடுத்து விளையாட்டு வீரர்களின் மத்தியிலும் இதுபோன்று இன வேறுபாடு காட்டப்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழத் தொடங்கியது. மேற்கு இந்திய தீவு அணியின் சில வீரர்கள் தங்களுக்கு நிகழ்ந்த அனுபவங்களை வெளிப்படையாகக் கூறத் தொடங்கினர்.
அந்த வகையில் தற்போது தென் ஆப்பிரிக்காவின் கிரிக்கெட் ஜாம்பவனான மகாயா நிடினி செய்தியாளர்கள் மத்தியிலும் தானும் இப்படி இன வேறுப்பாட்டுடன் நடத்தப் பட்டேன் என மனம் நொந்து சில செய்திகளை பகிர்ந்து கொண்டு இருக்கிறார். அதுவும் சொந்த அணிக்குள் இப்படி நடத்தப்பட்டேன் எனக் கூறியதுதான் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பல ஆண்டுகளாக தென் ஆப்பிரிக்கா அணிக்காக விளையாடிய மகாயா நிடினி இதுவரை 390 விக்கெட்டுகளை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அணியின் அசைக்க முடியாத வீரராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் மகாயா நிடினி இன வெறுப்புடன் நடத்தப்பட்டது குறித்து வெஸ்ட் இண்டிஸ் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சமி காட்டமான கருத்தைக் கூறியிருக்கிறார். “இதுமிகவும் துயரமானது. மகாயா நிடினிக்கு இது ஏன் என்று என்னைப் போலவே புரியவில்லை. தனிமையிலிருந்து அவர் ஓடியே போயிருக்கிறார். அவரது சக வீரர்கள் மேல் இருந்த மதிப்பு போய்விட்டது. அந்த வீரர்கள் நினைத்து வெட்கப் படுகிறேன். நிடினி நீங்கள் எங்களுக்கு எப்பவுமே ஹீரோதான்” எனத் தெரிவித்து இருக்கிறார்.
மகாயா நிடினி விஷயத்தில் காட்டமான கருத்து தெரிவித்து இருக்கும் டேரன் சமி முன்னதாக இந்தியாவில் தானும் இனவெறுப்புக்கு ஆளானதாக குற்றம் சாட்டியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தகக்து. தற்போது கறுப்பினத்தவர் வாழ்க்கை முக்கியம் என்ற அமைப்பின் தலைவராக டேரன் சமி இயங்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments