திருப்பதி ஏழுமலையானுக்கே இந்த நிலைமையா??? பதற வைக்கும் அதிர்ச்சி தகவல்!!!
- IndiaGlitz, [Monday,July 13 2020]
கொரோனா ஊரடங்கினால் திருப்பதி ஏழுமலையான் கோவிலின் வருமானம் குறைந்து இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. கொரோனா ஊரடங்கினால் உலகில் பெரும்பாலான மக்கள் தற்போது வேலையை இழந்து வறுமையில் வாடும் நிலைமை உருவாகி இருக்கிறது. பெரிய பெரிய நிறுவனங்களே தங்களது ஊழியர்களுக்குச் சம்பளத்தைக் கொடுக்க முடியாமல் திண்டாடி வருகின்றன. தற்போது உலகில் பணக்காரக் கடவுளாகக் கருதப்படும் ஏழுமலையானுக்கும் இதே நிலைமைதான் என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
இந்தியாவில் கடந்த மார்ச் 23 ஆம் தேதி இரவு முதல் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. அதில் தற்போது பெரும்பாலான விதிமுறைகள் தளர்த்தப்பட்டு இருக்கின்றன. இதனால் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லலாம் என்ற செய்தி வெளியிடப்பட்டு இருக்கிறது. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு மக்கள் வரவில்லை என்றும் வருமானம் குறைந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. பொதுவாக வருடம்தோறும் 2 கோடி பக்தர்கள் ஏழுமலையான் கடவுளை தரிசிக்கின்றனர். ஒரு மாதத்திற்கு குறைந்தது 100 கோடி வரையிலும் இக்கோவிலில் வருமானம் இருப்பதாகவும் கணிக்கப் பட்டுள்ளது. ஆனால் கடந்த நான்கு மாதங்களாக கொரோனா காரணமாக கோவில் சாத்தியே வைக்கப் பட்டு இருந்தது. இதனால் ரூ.385 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது.
கடந்த இரண்டு வாரங்களாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதன் மூலம் ரூ. 15 கோடியே 80 லட்சம் வருமானம் கிடைத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் பணக்காரக்கடவுளுக்கே இந்நிலைமை என்றால் நாமெல்லாம் எம்மாத்திரம் என்று சிலர் பெருமூச்சு விட்டு கொண்டிருக்கின்றனர்.
தரிசனத்திற்கு அனுமதிக்கப் பட்ட மக்கள் சமூக இடைவெளியை முறையாகக் கடைப்பிடிப்பதாகவும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு இருப்பதாகவும் தேவஸ்தான கமிட்டி தெரிவித்து இருக்கிறது.