டைட்டில் வின்னர் யார்? பிக்பாஸ் மாஸ்டர் பிளான் இதுதானா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று யாஷிகா மற்றும் பாலாஜி வெளியேறுகின்றனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த இருவரும் வெளியேறிவிட்டால் மீதி இருப்பவர்கள் ஐஸ்வர்யா, ஜனனி, விஜயலட்சுமி மற்றும் ரித்விகா.
ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் வட இந்திய பெண்கள், தமிழ் பெண்கள் என இரண்டு கூட்டணி இருந்தது. வட இந்திய பெண்கள் கூட்டணியில் இருந்து இன்று யாஷிகா வெளியேறிவிடுவதால் ஐஸ்வர்யா தனித்துவிடப்படுகிறார். தமிழ்ப்பெண்கள் கூட்டணியில் மூவர் உள்ளனர்.
இந்த நிலையில் டைட்டில் வின்னரை தேர்வு செய்பவர்கள் பெரும்பாலும் தமிழ் வின்னரைத்தான் தேர்வு செய்வார்கள். ஆனால் அவ்வாறு தேர்வு செய்யப்படும்போது அவர்களது வாக்குகள் மூன்றாக பிரியும். ஆனால் ஐஸ்வர்யாவுக்கு குறைந்த ஆதரவாளர்களே இருந்தாலும் அப்படியே முழுமையான வாக்குகள் விழும். இதன் அடிப்படையில் ஐஸ்வர்யாவுக்கு மூவரை விட அதிக ஓட்டுக்கள் விழ வாய்ப்பு இருப்பதாக நம்ப வைத்து, கமல்ஹாசனிடம் ஒரு கலர்கலரான கிராப்பை கொடுத்து ஐஸ்வர்யாவை டைட்டில் வின்னாராக்குவதுதான் பிக்பாஸின் மாஸ்டர் பிளானாக இருக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனை தவிர்க்க தமிழ்ப்பெண் டைட்டில் வின்னராக வேண்டுமென்றால் மூவரில் ஒருவரை தேர்வு செய்து அவருக்கு மட்டும் ஓட்டு போடுவதே சால சிறந்தது.
ஓட்டு போடுபவர்கள் என்னதான் திட்டமிட்டு ஓட்டை போட்டாலும் ஐஸ்வர்யா மீது பிக்பாஸ் வைத்திருக்கும் பாசமே வெல்லும் என்ற விதி இருந்தால் யாராலும் அதை மாற்ற முடியாது. ஒட்டுமொத்த மக்களின் எதிர்ப்பையும் மீறி ஐஸ்வர்யாவை வின்னராக்குவதால் பிக்பாஸூக்கு அப்படி என்ன லாபம் என்று தெரியவில்லை.
மொத்தத்தில் இந்த நிகழ்ச்சியினால் கமல்ஹாசன் தேவையில்லாமல் நெட்டிசன்களிடம் சிக்கியுள்ளார். ஐஸ்வர்யாவை கடந்த வாரம் கடிந்து கொண்டதால் ஐஸ்வர்யா ஆர்மியிடமும் திட்டு வாங்கிய கமல்ஹாசன், இந்த நிகழ்ச்சியை முழு சுதந்திரத்துடன் நடத்த முடியாமல் போனதிற்காக மக்களிடமும் திட்டு வாங்கி வருகிறார்.
மொத்தத்தில் இந்த நிகழ்ச்சியினால் பார்வையாளர்களின் 105 நாட்கள் வீணாகியது மட்டும்தான் உண்மை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments