மெர்சல் கதை இதுதானா? இணையத்தில் பரவும் வதந்தி
Send us your feedback to audioarticles@vaarta.com
இளையதளபதி விஜய் நடித்துள்ள 'மெர்சல்' திரைப்படம் வரும் 18ஆம் தேதி தீபாவளி தினத்தில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. முதல்முறையாக 3 வேடங்களில் விஜய் நடித்துள்ள இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இணையத்தில் 'மெர்சல்' படத்தின் கதை இதுதான் என்று ஒருசிலர் பதிவு செய்துள்ளனர். அந்த கதை என்னவென்று பார்ப்போமா!
சென்னையில் டாக்டராக இருக்கும் விஜய் மீட்டிங் ஒன்றில் கலந்து கொள்ள அமெரிக்கா செல்கிறார். அங்கு தற்செயலாக மேஜிக்மேன் விஜய்யை பார்க்கின்றார். இருவருக்கும் உள்ள உருவ ஒற்றுமையை பார்த்த பின்னர் இருவரும் சகோதரர்கள் என்பது தெரியவருகின்றது
பிளாஷ்பேக்கில் பஞ்சாயத்து தலைவர் விஜய் எதிர்பாராத காரணம் ஒன்றால் தனக்கு பிறக்கும் இரட்டை குழந்தைகளில் ஒன்றை ராஜஸ்தான் குரூப் ஒன்றுக்கு கொடுக்கின்றார். இன்னொரு குழந்தையை அவரே வளர்க்கின்றார். இந்த நேரத்தில் மதுரையில் ஃபேக்டரி ஒன்று நடத்தி வரும் எஸ்.ஜே.சூர்யாவின் அநியாயத்தை எதிர்த்து போராடுகிறார். இதனால் அவர் எஸ்.ஜே.சூர்யாவால் கொல்லப்படுகிறார்.விஜய்யின் மகனை கோவை சரளா எடுத்து சென்னைக்கு அழைத்து வந்து வளர்க்கின்றார்
இந்த நிலையில் இரு விஜய்யும் இணைந்து பெற்றோர்களை கொன்ற எஸ்.ஜே.சூர்யாவை பழிவாங்குகின்றனர். இதுதான் கதை என்று இணையதளங்களில் பரவி வருகின்றது. இது உண்மையா? என்பது வரும் 18ஆம் தேதி தெரிந்துவிடும்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments