வேதாளம் தலைப்பு ஏன்? புதிய தகவல்கள்

  • IndiaGlitz, [Thursday,September 24 2015]

அஜீத் படத்தின் தலைப்புக்காக காத்திருந்த அவரது ரசிகர்களுக்கு நேற்று ஒருவழியாக 'வேதாளம்' என்ற தலைப்பை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 'வரம்', சரவெடி, என பல டைட்டில்கள் பரிசீலிக்கப்பட்டு இந்த படத்திற்கு 'வேதாளம்' என்ற டைட்டில் வைக்கப்பட்டதற்கு சிறப்பு காரணம் இருப்பதாகவும் தற்போது தெரியவந்துள்ளது.

இந்த படத்தில் அஜீத் மூன்றுவிதமான கெட்டப்புகளில் தோன்றவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இதில் ஒரு கெட்டப் வில்லன் டைப் கேரக்டர் என்றும், அந்த கேரக்டரின் பெயர் 'வேதாளம்' என்றும், அந்த கேரக்டர், 'சந்திரமுகி' வேட்டையன், 'எந்திரன்' வில்லன் ரஜினி போன்ற ஈர்ப்பு மிகுந்த கேரக்டர் என்றும் இதன் காரணமாகவே அந்த கேரக்டரின் பெயரையே படத்தின் தலைப்பாக இயக்குனர் சிவா தேர்வு செய்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் அஜீத்துக்கு "V" என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் படங்கள் எல்லாமே செண்டிமெண்ட்டாக சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றுள்ளது. வாலி, வில்லன், வரலாறு, வீரம் ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் 'வேதாளம்' படமும் சேருமா? என்பதை தீபாவளி வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

ரஜினியின் திருமண மண்டபத்தில் பாண்டவர் அணி ஆலோசனை

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் அக்டோபர் மாதம் 18ஆம் தேதி ஓய்வு பெற்ற நீதிபதியான...

அஜீத்தின் 'வேதாளத்திற்கு உதவிய ராகவா லாரன்ஸ்?

அஜீத் நடித்து வரும் 'தல 56' படத்திற்கு 'வேதாளம்' என்ற டைட்டிலை படக்குழுவினர் நேற்று இரவு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்....

மதுரை மக்களை ஆச்சரியப்படுத்திய அஜீத் ரசிகர்கள்

அஜீத்துக்கு சமூகவலைத்தளங்களில் பெரும்புகழ் இருக்கின்றது என்பதை அனைவரும் அறிவோம். அஜீத் பட செய்திகளோ...

'புலி'-ஜிங்குலியா புரமோ பாடல் விமர்சனம்

நேற்று ஒரே நாளில் இளையதளபதி விஜய்யின் 'புலி' இரண்டாவது டிரைலர் மற்றும் தல அஜீத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக்...

கிருமி- திரைவிமர்சனம் : யதார்த்த சாயல் கொண்ட கமர்ஷியல் படம்

தமிழ் சினிமா வரலாற்றில் அதிக விருதுகளையும் பாராட்டுகளையும் குவித்து வணிகரீதியாகவும்...