கொரோனா நேரத்தில் பப்புவா நியூ கினியாவுக்கு இப்படியொரு சோதனையா??? பரபரப்பு தகவல்!!!
- IndiaGlitz, [Friday,July 17 2020]
இந்தோனேசியாவிற்கு அருகில் இருக்கும் ஒரு தீவு பப்புவா நியூ கினியா. அத்தீவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் ரிக்டர் அளவில் 7.2 ஆக இருந்ததாகவும் அதோடு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. பசிபிக் பெருங்கடல் அருகில் இருக்கும் இந்த தீவில் அடிக்கடி நிலநடுக்கம் மற்றும் குறைந்த அளவிலான சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படுவது வாடிக்கையாகவே மாறியிருக்கிறது. அதுபோல இன்று காலையும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு ஒரு மணிநேரத்தில் திரும்ப பெறப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பப்புவா நியூ கினியாவின் அருகில் உள்ள ரிங்க் ஆப் பயர் என்ற பகுதியில்தான் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டு இருக்கிறது. கடந்த 2008 ஆம் ஆண்டு இப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 67பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. அந்த விபத்தில் 500 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து இருக்கின்றனர். அதைத்தவிர 1 லட்சம் மக்கள் பாதிக்கப் பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கமும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி விடுமோ என்ற பயத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப் பட்டனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் பாதிப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாக வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பெரிய அளவிலான சேதங்கள் இருக்காது எனவும் ஊடகங்கள் நம்பிக்கை அளித்து வருகின்றன.