தமிழகத்தில் இவ்வளவு தற்கொலையா? 4 நிமிடத்தில் ஒரு உயிர் பிரிவதாக பகீர் தகவல்!!!

  • IndiaGlitz, [Thursday,September 03 2020]

 

 

இந்திய அளவில் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கையில் தமிழகம் 2 ஆவது இடத்தைப் பிடித்து இருப்பதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. அதுவும் 4 நிமிடத்திற்கு ஒருவர் உயிரை மாய்த்துக் கொள்வதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் நடக்கும் மரணங்கள், தற்கொலைகள் குறித்த புள்ளிவிவரங்களை ஆண்டுதோறும் தேசிய குற்ற ஆவணங்களின் அமைப்பு ஆய்வு செய்து வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த ஆண்டில் பதிவான தற்கொலை குறித்த புள்ளிவிவரக் கணக்குகளை இந்த அமைப்பு வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிக்கையில் இந்தியாவிலேயே தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கையில் தமிழகம் 2 ஆவது இடத்தைப் பிடித்து இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த வரிசையில் மராட்டியம் முதல் இடத்தைப் பிடித்து இருக்கிறது. மேற்கு வங்காளம் 3 ஆவது இடத்தையும் மத்தியப் பிரதேசம் 4 ஆவது இடத்தையும் கர்நாடகா 5 ஆவது இடத்தையும் பிடித்திருக்கின்றன.

இந்தியாவில் கடந்த 2018 இல் 1 லட்சத்து 34 ஆயிரத்து 516 பேர் தற்கொலைகளும் 2019 இல் 1 லட்சத்து 39 ஆயிரத்து 123 தற்கொலைகளும் பதிவாகி இருக்கின்றன. இதன்மூலம் தற்கொலையில் கடந்த 2018 ஆம் ஆண்டைவிட 2019 இல் 3.4% அதிகரித்து இருப்பதும் பெரும் வருத்ததைத் தருகிறது.

கடந்த ஆண்டில் மராட்டிய மாநிலத்தில் 18,916 பேரும் தமிழ்நாட்டில் 13,493 பேரும் மேற்கு வங்காளத்தில் 12,665 பேரும் மத்தியப் பிரதேசத்தில் 12,457 பேரும் கர்நாடகாவில் 11,288 பேரும் என ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 123 தற்கொலைகள் பதிவாகி இருக்கிறது. இதில் 41 ஆயிரத்து 493 பேர் பெண்கள், 17 பேர் திருநங்கைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதில் கடந்த ஆண்டு மட்டும் 10 லட்சம்பேர் கொண்ட சென்னையில் 2,461 பேரும் டெல்லியில் 2,423 பேரும் பெங்களூரூவில் 2,081 பேரும் மும்பையில் 1,223 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த 2018 இல் பெங்களூரூவில் 2,082 தற்கொலை நடந்திருக்கிறது. இவர்கள் அனைவரும் குடும்பப் பிரச்சனை, உடல் நலக்குறைவு, தொழில் பிரச்சனை, தனிமை உணர்வு, வன்கொடுமை, மனநலம் பாதிப்பு, குடிப்பழக்கத்தை கைவிட முடியாமை, நிதி நெருக்கடி உள்பட பல்வேறு பிரச்சனைகளால் தங்களது உயிரை மாய்த்து உள்ளனர். மேலும் கடன் பிரச்சனைகளால் உயிரை மாய்த்துக் கொள்வதில் கர்நாடகம் 2 ஆவது இடத்தில் இருக்கிறது என்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

More News

அகதியாக தஞ்சம் அடைந்தவருக்கு ஹெலிகாப்டரில் பிரசவம்!!! பரபரப்பு தகவல்!!!

இத்தாலிக்கு அகதியாக வந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் பல்லாயிரக் கணக்கான அடி உயரத்தில் பறந்த ஹெலிகாப்டரில் குழந்தையைப் பெற்றெடுத்த சம்பம்வம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது

கொரோனா காலத்திலும் இந்திய அளவில் வேலை வாய்ப்பின்மையைக் குறைத்து அதிரடி காட்டும் தமிழக அரசு!!!

கொரோனா தாக்கத்தால் இந்தியாவில் கடந்த 5 மாதங்களாக வேலைவாய்ப்பின்மை விகிதம் தொடர்ந்து

சுசிந்திரன் அடுத்த படத்தில் இரண்டு தமிழ் ஹீரோக்கள்!

வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அதன் பின்னர் 'நான் மகான் அல்ல' 'பாண்டிய நாடு' 'ஜீவா' 'பாயும் புலி' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியவர்

கமல் கட்சியின் அண்டை மாநில தலைவர் கொரோனாவால் உயிரிழப்பு!

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் மிக அதிகரித்து கொண்டே வருகிறது.

'ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்' நடிகருக்கு கொரோனா: மனைவி, மகள்களுக்கும் பாதிப்பு என தகவல்

பிரபல ஹாலிவுட் நடிகரும் WWE வீரருமான டிவானே ஜான்சன் என்ற ராக் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.