தமிழகத்தில் மே 31க்கு பிறகும் தளர்வுகளற்ற ஊரடங்கா? முதல்வர் சொல்வது என்ன?

தமிழகத்தில் மே 31க்குப் பிறகும் தளர்வுகளற்ற ஊரடங்கு விதிக்கப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருக்கிறார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரக்கடம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் கொரோனா தடுப்பூசி முகாமை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்த முகாமில் 18-45 வயதுடைய 2,000 தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட இருக்கிறது. மேலும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆக்சிஜன் தயாரிப்பு தொழிற்சாலையில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்வுகளுக்குப் பின்பு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவரிடம் தமிழகத்தில் மேலும் தளர்வுகளற்ற ஊரடங்கு நீடிக்குமா எனக் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், கொரோனா ஊரடங்கு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கு 2 வாரத்திற்கு அமல்படுத்துமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனாலும் ஒரு வாரத்திற்கு தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சற்று தணிந்து வருகிறது. இதனால் நிலைமையைப் பொறுத்து மீண்டும் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

More News

வைரலாகும் மீம் கோகுலின் குடும்ப புகைப்படம்!

மீம் கலைஞராக இருப்பவர் என்று சொல்வதைவிட 'மானாட மயிலாட' கோகுல் என்று சொன்னால் அனைவருக்கும் தெரியும். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிக்பாஸ் குரலில் பேசுபவர் கோகுல் தான் என்றும் கூறப்படுவதுண்டு

கண்ணாடி அதன் முன்னாடி: கஸ்தூரியின் லேட்டஸ்ட் செல்பி!

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான கஸ்தூரி சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக இருப்பார் என்பதும் திரைப்பட செய்திகள் மட்டுமின்றி சமூக அரசியல் கருத்துக்களையும்

58 வயதில் வேற லெவல் வொர்க்-அவுட்: ராதிகாவின் வைரல் வீடியோ

கடந்த 1978ஆம் ஆண்டு பாரதிராஜாவின் 'கிழக்கே போகும் ரயில்' என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமாகி அதன்பின் கமல், ரஜினி, விஜயகாந்த், சரத்குமார் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நாயகியாக

தூங்கக்கூட முடியல… PSBB பள்ளி பாலியல் தொல்லை குறித்து கிரிக்கெட் வீரர் மனவேதனை!

சென்னை கே.கே நகரில் உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் அப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம்

வேலை இல்லையா? கொரோனா நேரத்தில் ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க எளிய வழி…

கொரோனா பரவல் காரணமாக உலகமே பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து இருக்கிறது.