வருகிற ஜுன் 21 அன்று உலகம் அழியப்போகிறதா??? இணையத்தில் உலவும் பரபரப்பு செய்திகள்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
தற்போது, நாசா விஞ்ஞானிகளே மண்டையைப் பிய்த்துக் கொள்ளும் அளவிற்கு நமது சமூக வலைத் தளங்களில் ஒரு பரபரப்பு செய்தி உலவிக்கொண்டு இருக்கிறது. பரபரப்புக்கு பஞ்சமில்லாத சமூக வலைத் தளங்களில் நம்மூர் விஞ்ஞானிகள் எல்லாவற்றையும் பேசி அலசுவது வழக்கம்தான். ஆனால் இப்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் ஒரு விவாதம் உலகத்தின் அழிவைப் பற்றியது. 2000 ஆண்டை நமது காலாண்டர் தாண்டியதில் இருந்தே உலகம் அழியப் போகிறது என்ற பரபரப்பை சிலர் கிளப்பி வருகின்றனர். அதிலும் குறிப்பிட்ட ஒரு தேதி 21 டிசம்பர், 2012 அன்று உலகம் கண்டிப்பாக அழியப் போகிறது என்ற பரபரப்பு தகவல் உலகம் முழுவதும் வலம் வந்தது.
போததற்கு, மாயன் கலாச்சாரம் என்ற பழமையான ஒரு நாகரிகத்தில் இருந்து இந்த தகவலுக்கு ஆதாரத்தை எடுத்து சிலர் குவித்து இருந்தார்கள். இதை மையப்படுத்தி ஹாலிவுட் படம்கூட எடுக்கப்பட்டு இருந்தது. மூநடம்பிக்கை கொண்ட சிலர்தான் இதையெல்லாம் நம்புவார்கள் என நினைத்து விட வேண்டாம். உலகம் முழுவதும் பல விஞ்ஞானிகள் கூட இந்தக் கருத்தை பகிர்ந்து கொண்டும் இருந்தனர். ஆனால் டிசம்பர் 21, 2012 இல் இந்த உலகம் அழியவில்லை. ஆனால் இதே மாயன் கலாச்சாரம் கூறிய கணிப்புப்படி வருகிற ஜுன் 21 ஆம் தேதி கண்டிப்பாக உலகம் அழியப்போகிறது என ஒரு விஞ்ஞானி மறுபடியும் கிளப்பி விட்டு இருக்கிறார். அதனால் திரும்பவும் பரபரப்பு ஏற்பட்டு இணையத்தில் இதைப் பற்றிய தேடல்களே அதிகமாகி இருக்கின்றன.
மாயன் காலண்டர்
தென் அமெரிக்காவில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாகரிகமான சில சமூகங்கள் வாழ்ந்து மடிந்ததற்காக ஆதாரங்களை தொல்லியல் வல்லுநர்கள் கண்டுபிடித்து இருந்தனர். அப்படி கண்டுபிடிக்கப் பட்ட ஒரு மூத்த கலாச்சார மனிதர்கள்தான் மாயன் இனத்தவர்கள். இந்த இனத்தைச் சார்ந்த சில அறிஞர்கள் உலகத்தின் இயக்கத்தைப் பற்றியும் மனித வாழ்க்கையைப் பற்றியும் சில கருத்துகளை பதிவு செய்து வைத்துள்ளனர். அதேபோல நாட்களைக் கணிப்பதற்கு பல வகையான காலண்டர்களையும் அவர்கள் பயன்படுத்தி இருந்தனர். அப்படி அவர்கள் பயன்படுத்திய ஒரு காலண்டர் முறை மாயன் காலண்டர் என்பது. அந்த காலண்டரில் குறிப்பிட்டு இருந்த பல நிகழ்வுகள் நடந்ததாக நம்பப்பட்டு வருகிறது. உதாரணத்திற்கு பூகம்பம், எரிமலை வெடிப்பு போன்றவை.
இந்த மாயன் காலண்டர் என்பது 5,126 வருடங்களைக் கொண்டது. மேலும் 13 பிரிவுகளாக இந்தக் காலண்டர் பிரிக்கப் பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. அப்படி பிரிக்கப்பட்ட 4 ஆவது தொகுப்பு காலக்கட்டத்தில் இந்த மாயன் இனத்தவர் வாழ்ந்து இருக்கின்றனர். மாயன் இனக் கலாச்சாரம் 13, 20 போன்ற எண்கள் மிகவும் சுவாரசியம் உடையதாகக் கொண்டாடி இருக்கிறது. காரணம் இந்த இரண்டு எண்களையும் பெருக்கினால் ஒரு மனிதன் கருவறையில் உருவாவதற்கு தேவையான நாட்கள் வரும் எனவும் கூறப்படுகிறது. அப்படி பழமையான கலாச்சாரத்தைச் சார்ந்த மாயன் கலாச்சாரம் ஒரு குறிப்பிட்டத் தேதிக்குப் பின்னர் நாட்களை குறிப்பிடாமல் நிறுத்தி இருக்கின்றனர். அப்படி அவர்கள் நிறுத்திய நாள் 21 டிசம்பர், 2012. எனவே அந்த நாளோடு உலகம் அழியப் போகிறது என்று சிலர் உறுதியாக நம்பவும் செய்தனர்.
நாம் பொதுவாக கிரிக்கோரியன் காலண்டர் கணித்த நாள் கணக்குகளைப் பயன்படுத்தி வருகிறோம். கிரிக்கோரியன் கணக்கில் மாயன் காலண்டர் சொன்ன உலகம் அழியும் நாள் 21 டிசம்பர், 2012 இல் முடிந்து விட்டது. ஆனால் கிரிக்கோரியன் காலண்டருக்கு முன்பு ஜுலியன் என்ற காலண்டர் முறையை நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்தி வந்தார்கள். பழைய ஜுலியன் கணிப்புப்படி மாயன் காலண்டர் குறிப்பிட்ட உலகம் அழியும் நாள் வருகிற ஜுன் 21, 2020 ல் வருகிறது. அந்த நாளில் உலகம் அழியும் என்ற கருத்துக் கணிப்பை தற்போது, ஒரு விஞ்ஞானி தனது டிவிட்டர் பதிவில் கொளுத்தி போட்டு இருக்கிறார். அவர் பெயர் Paolo Tagalogium. இப்படி ஒரு அதிர்ச்சியான தகவலை அசாட்டலாக சொல்லிவிட்டு அவர் கிளம்பிவிட்டார். ஆனால் நம்மால் எப்படி நிம்மதியாக உறங்க முடியும் என்று பல சமூக வலைத்தள நிர்வாகிகள் அதுபற்றிய ஆய்வில் ஈடுபட ஆரம்பித்துவிட்டனர்.
மேலும் வருகிற ஜுன் 21 இல் உலகம் அழிவதற்கு இன்னொரு காரணத்தையும் நம்மூர் விஞ்ஞானிகள் சேர்த்துக் கொண்டு இருக்கின்றனர். கடந்த சில வருடங்களுக்கு முன்னால் நிபுரு என்ற ஒரு புது கிரகம் கண்டுபிடிக்கப் பட்டு இருக்கிறது. அது பூமியை நோக்கி வேகமாக வந்துக் கொண்டு இருக்கிறது. அந்த கிரகம் மட்டும் பூமியைத் தாக்கினால் நம்ம பூமி.. அவ்வளவுதான்.. என்ற பரபரப்புகள் கிளப்பப் பட்டு இருந்தன. இதுகுறித்து விளக்கம் அளித்த நாசா விஞ்ஞானிகள் அப்படியொரு கிரகமே இல்லை. இது முற்றிலும் வதந்தி எனக் குறிப்பிட்டு இருந்தது. ஆனால் சிலர் இந்தக் கருத்தில் உறுதியாக இருந்தனர்.
தற்போது ஜுலியன் காலண்டர் கணிப்புப்படி மாயன் காலண்டர் நிறுத்திய தேதி ஜுன் 21, 2020 இல் வருகிறது. அதனால் நமக்கு ஜுன் 22 என்ற ஒரு நாள் இருக்கப் போவதில்லை. மேலும் ஜுன் 21 இல் நிபுரு என்று புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட கிரகம் நம்ம பூமியை தாக்கி அழிக்கப் போகிறது. இந்தக் கருத்துத்தான் சமூகவலைத் தளத்தில் தற்போது பரபரப்பை கிளப்பி இருக்கிறது. ஆனால் இவையனைத்தும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப் பட்ட உண்மைகள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. பல நேரங்களில் நாசா விஞ்ஞானிகள் நிபுரு என்றொரு கிரகம் இல்லவே இல்லை என்று அடித்துக் கூறியிருக்கின்றனர். மேலும் மாயன் காலண்டர் எந்தக் காரணத்தினால் 5126 ஆண்டுகளோடு முடித்துக் கொண்டனர் என்பதற்கும் சரியான விளக்கம் இல்லை. இந்த இரண்டு கருத்துகளையும் வைத்துக்கொண்டு அறிவியல் பூர்வமாக எதையும் சொல்ல முடியாது என்றும் சிலர் கருத்துக் கூறி வருகின்றனர்.
according to the Julian calendar, we are currently in the year 2012 and not in 2020... pic.twitter.com/HQYQTnQMQ3
— Paolo Tagaloguin (@PaoloTagaloguin) June 16, 2020
It fits. I've been thinking maybe the Mayan guy was dyslexic and had 2012 and 2021 mixed up? It seems like the Julian calendar messed it up. Kill Ceasar! This explains all the "end of days" shit going on... https://t.co/2GOD8sAxJ0
— Cass Michaels (@WriterCMichaels) June 13, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com