இன்று கமல் வெளியிடும் குறும்படம் ஆரவ்வின் மருத்துவ முத்தமா?

  • IndiaGlitz, [Sunday,August 27 2017]

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் ஓவியாவுக்கு ஆரவ் கொடுத்த மருத்துவ முத்தம் குறித்து அனைவரும் அறிந்ததே. ஆனால் இந்த மருத்துவ முத்தக்காட்சியை இதுவரை ஒளிபரப்பாமல் சேனல் நிர்வாகம் சஸ்பென்ஸ் காட்டி வருகிறது.

இந்த நிலையில் நேற்று நிகழ்ச்சியின் இறுதியில் பேசிய கமல்ஹாசன், நாளை நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஒரு குறும்படத்தை காண்பிக்க இருப்பதாக தெரிவித்தார். இன்று ஒளிபரப்பாக உள்ள ந்த குறும்படம் அனேகமாக ஆரவ்வின் மருத்துவ முத்தம் குறித்துதான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் நேற்று ஆரவ் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடந்த போது குறுக்கிட்ட கமல், 'மருத்துவ முத்தம்' குறித்த ஆரவ் கூறிய விளக்கத்திற்கு அதிருப்தியை தெரிவித்து கொண்டார். ஓவியாவுக்கு மருத்துவ முத்தம் கொடுத்ததாக ஒப்புக்கொள்ளும் வகையில் பங்கேற்பாளர்களிடம் கூறாமல், கமல் சார் மருத்துவ முத்தம் குறித்து கூறச்சொன்னதாக கூறினார். இதற்கு அப்போதே தான் பதில் அளித்திருக்க முடியும் என்று கூறிய கமல், தற்போது குறும்படம் மூலம் பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.