வடகொரிய அதிபர் கோமாவில் இருக்கிறாரா??? பரபரப்பை கிளப்பும் முன்னாள் தூதர்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகத்தின் தொலைத் தொடர்புகளில் இருந்து முற்றிலும் விலகி இருக்கும் நாடான வட கொரியாவின் நடவடிக்கைகள் பெரும்பாலும் வெளியுலகிற்கு தெரிவதில்லை. இந்நிலையில் வட கொரியாவின் பல்வேறு தகவல்களை அவ்வபோது தென் கொரிய அதிகாரிகள் வெளிப்படுத்தி வருவது வழக்கம். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் இறந்து விட்டார் என்று உலகத்தின் பல தொலைக்காட்சி நிறுவனங்கள் செய்தியை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய போதும் தென் கொரிய வெளியுறவுத்துறை இந்தத் தகவலில் உண்மையில்லை எனக் கூறியிருந்தது. அப்படி வடகொரியாவை தொடர்ந்து கண்காணித்து வரும் தென்கொரியாவின் முன்னாள் தூதர் ஒருவர் பரபரப்பான தகவல் ஒன்றை தற்போது வெளியிட்டு இருக்கிறார்.
தென்கொரியாவின் முன்னாள் அதிபராக கிம் டே ஜங் பதவியில் இருந்தபோது அவரிடம் உதவியாளராக இருந்தவர் சாங் சாங்-மின். தற்போது இவர்தான் வடகொரிய அதிபர் கோமாவில் இருக்கிறார், இதனால் வடகொரியாவின் அதிகாரம் வெற்றிடமாக மாறிவிடக் கூடாது என்பதற்காக அதிபர் கிம் ஜாங் உன் சில அதிகாரங்களை தனது சகோதரியிடம் கடந்த சில தினங்களுக்கு முன் ஒப்படைத்தார். ஒருவேளை அதிபர் கிம் ஜாங் உன் உயிரிழக்கும் நிலைமை ஏற்பட்டால் வடகொரியா பெரும் ஆபத்தைச் சந்திக்க வேண்டிவரும் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத் தக்கது.
மிக வலிமையான அணு ஆயுத சோதனைகளை நடத்தி உலகையே திரும்பி பார்க்க வைத்த வடகொரியா தற்போது கொரோனா தாக்கத்தால் பெரும் சிக்கலை சந்தித்து வருகிறது. இந்நிலையில் அதிபர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிகாரத்தின் சில பகுதிகளை அவரது தங்கை கிம் யோ ஜாங்கிடம் ஒப்படைப்பதாகக் கூறி அதை ஒப்படைக்கவும் செய்தார். இதற்கு முக்கியக் காரணமாக மன அழுத்தத்தில் இருக்கிறேன் என்பதையும் கிம் ஜாங் உன் சுட்டிக் காட்டியிருந்தார். இதனால் வடகொரியாவின் அரசியல் அதிகாரம் முழுக்க தங்கை கிம் ஜாங் உன்னுக்கு செல்ல இருக்கிறதா என்பதை சந்தேகத்துடன் பல ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டன.
இந்நிலையில் தென் கொரியாவின் முன்னாள் தூதர் சாங் சாங் –மின் வடகொரிய அதிபர் கிம் தற்போது கோமாவில் இருக்கிறார். அவர் உயிருடன் இருக்கிறார். மேலும் உடல்நிலை குறித்த முழுமையான தகவல்கள் எதுவும் தெரியவில்லை. ஆனால் இந்நிலைமை வடகொரியாவிற்கு நன்மை அளிப்பதாக இல்லை என்றும் குறிப்பிட்டு உள்ளார். இத்தகவலை குறித்து வடகொரியாவின் அதிகாரப்பூர்வ ஊடகம் செய்தி எதையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த வருடத்தின் தொடக்கத்தில் இருந்து அதிபரைப் பற்றி வரும் தகவல்கள் அனைத்தும் இச்செய்தி உண்மையாக இருக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகின்றன. காரணம் அதிபர் இறந்து விட்டர் என்று உறுதியாக பாக்ஸ் நியூஸ் உட்பட பல ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டன. அதைத் தொடர்ந்து அதிபர் ஒரு தொழிற்சாலை தொடக்க விழாவில் கலந்து கொண்டு சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஆனால் தொடர்ந்து அனைத்து நிகழ்ச்சிகளிலும் அரசாங்க அலுவல்களிலும் அவர் கலந்து கொள்ளாதது பெரும் சந்தேகத்தையே எழுப்புகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments