'ரெட்' படத்தின் 2வது பாகமா 'தல 56'?

  • IndiaGlitz, [Friday,September 18 2015]

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் 'தல 56' படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் அஜீத் டாக்சி டிரைவர் வேடத்தில் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே. ஆனால் இந்த படத்தில் இடம்பெறும் பிளாஷ்பேக் காட்சிகளில் அஜீத் வித்தியாசமான ஒரு கெட்டப்பில் வருவதாகவும், அந்த கெட்டப் அஜீத் ஏற்கனவே நடித்த 'ரெட்' படத்தின் கெட்டப் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படம் ரஜினியின் 'பாட்ஷா' படத்தை தழுவி எடுக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில்ம் இந்த படம் 'ரெட்' படத்தின் இரண்டாம் பாகம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் படக்குழுவினர் அஜீத் இந்த படத்தில் இரண்டு கெட்டப்பில் தோன்றுவதை மட்டுமே உறுதி செய்துள்ளனர்.

அஜீத், ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன், கபீர்சிங், ராகுல்தேவ், சூரி மற்றும் பலர் நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். ஏ.எம்.ரத்னம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் இந்த படம் வரும் தீபாவளி தினத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.

More News

சசிகுமாரின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் இயக்குனர் எம்.சசிகுமார் நடித்த 'தாரை தப்பட்டை' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து....

விஷால்-பாண்டியராஜ் படத்தின் டைட்டில் அறிவிப்பு

ஒருபுறம் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் பணியில் நடிகர் விஷால் பிசியாக இருந்தாலும் மற்றொரு பக்கம் படப்பிடிப்பிலும் தவறாது கலந்து கொண்டு வருகிறார்...

சிவாஜி கணேசனுக்கு மரியாதை செலுத்தும் 'புலி' படக்குழுவினர்

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'புலி' திரைப்படம் வரும் அக்டோபர் 1ஆம் தேதி ரிலீஸ் செய்வதை இன்றைய நாளிதழ் விளம்பரங்கள் உறுதி செய்துள்ளது......

விஷ்ணு படத்தின் ஹீரோயின் ஆகிறாரா அமலாபால்?

'மைனா' நடிகை அமலாபால், இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதல் திருமணம் செய்த பின்னரும் திரையுலகில் இருந்து விலகாமல் சூர்யாவுடன் நடித்த 'பசங்க 2' படத்தில் நடித்தார். இந்த படம் விரைவில் ரிலீசாகவுள்ளது....

ஜெயம் சகோதரர்களின் படம் பார்த்த சூர்யா சகோதரர்கள்

கடந்த மாதம் 28ஆம் தேதி வெளியான ஜெயம் சகோதரர்களின் 'தனி ஒருவன்' திரைப்படம் நான்காவது வாரமாக திரையரங்குகளில் ஓடி மாபெரும் வெற்றியை பெற்று வருகிறது....