அவர் மாறவேமாட்டார்… பாலிவுட் பிரபலத்தின் ஒற்றைப் பதிவால் குழம்பிய ரசிகர்கள்!
- IndiaGlitz, [Tuesday,February 16 2021]
நடிகர் அர்ஜுன் நடித்த “முதல்வன்“ படத்தில் “ஷக்கல லக்க பேபி“ பாடலுக்கு நடித்து இளசுகளின் மனதை கொள்ளைக் கொண்டவர் நடிகை சுஷ்மிதா சென். உலக அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் நாகர்ஜுனாவுடன் “ரட்சகன்“ படத்தில் நடித்து சினிமாவில் பெரிய என்ட்ரி கொடுத்தார். அதற்குப் பின் பல மொழிப் படங்களில் நடித்து தனக்கென சினிமா உலகில் நீங்கா இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
45 வயது ஆன நடிகை சுஷ்மிதா இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார். அதோடு 2 பெண் குழந்தைகளை தத்து எடுத்து வளர்த்து வருகிறார். இவரது செயலைப் பார்த்து ரசிகர்கள் பிரமித்து போன நிலையில் பிரபல ஹோட்டல் அதிபர் ஒருவரை காதலித்து வருவதாகக் கூறி இருந்தார். ஆனால் பின்னர் அந்தக் காதலும் தோல்வியில் முடிய தற்போது கடந்த சில வருடங்களுக்கு முன்பு தன்னைவிட 16 வயது குறைந்த ரொமன் லால் என்பவரை காதலித்து வருவதாகச் சமூக வலைத்தளத்தில் தெரிவித்து இருந்தார்.
இவருடன் ஒன்றாக வாழ்க்கை நடித்தி வரும் சுஷ்மிதா தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை போட்டு இருக்கிறார். இந்தப் பதிவை பார்த்த ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் நடிகை சுஷ்மிதாவின் காதல் மீண்டும் தோல்வியில் முடியுமா என்ற சந்தேகத்தை வெளிப்படுத்தி வருகின்றன.
நடிகை சுஷ்மிதா வெளியிட்டு உள்ள பதிவில், “அவர் மாறமாட்டார்… அவள் பிரியமாட்டாள் என்று ஆண்கள் நினைக்கின்றனர். ஆனால் அவள் சென்றுவிடுவாள்…” எனக் கூறி இருப்பதைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட இந்தப் பதிவைக் குறித்து நடிகை சுஷ்மிதா இதுவரை எந்த விளக்கத்தையும் தெரிவிக்க வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.