காப்பான் படத்தில் சூர்யா வில்லனா?

  • IndiaGlitz, [Thursday,July 11 2019]

சூர்யா நடித்து வரும் 'காப்பான்; திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது டப்பிங், சிஜி பணிகள் உள்பட தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் காப்பான்' இயக்குனர் கே.வி.ஆனந்த் சமீபத்தில் அளித்த பேட்டியில் 'காப்பான்' படத்தில் சூர்யாவின் கேரக்டரில் வில்லத்தனமும் இருப்பதாக கூறியுள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

கெட்ட விஷயங்களை செய்பவன் கெட்டவனும் இல்லை, எறும்புக்கு கூட தீங்கு நினைக்காதவன் நல்லவனும் இல்லை என்பதுதான் இந்த படத்தின் கதையின் மையப்புள்ளி என்றும், சூர்யாவின் கேரக்டர் நல்லவர் போல் தெரிந்தாலும் அதிலும் ஒரு வில்லத்தனம் இருக்கும் என்றும், அதேபோல் மோகன்லால், ஆர்யா, சாயிஷா கேரக்டர்களிலும் இரட்டை முகம் இருக்கும் என்றும் இயக்குனர் கே.வி.ஆனந்த் தெரிவித்துள்ளார்.

வில்லத்தனம் கொண்ட கேரக்டரில் நடிக்க சூர்யா எப்படி ஒத்து கொண்டார் என்பது குறித்து இயக்குனர் கே.வி.ஆனந்த் கூறுகையில், அவருக்கு என ஒரு நியாய தர்மம் வைத்துள்ளார். அதற்கு உட்பட்டு இருந்தால் நிச்சயம் அவர் எந்த கேரக்டரிலும் நடிக்க ஒப்புக்கொள்வார். தனது கேரக்டர் குறித்து முழு சந்தேகங்களையும் அவர் ஆரம்பத்திலேயே கேட்டு தெரிந்து கொள்வார். அப்படி ஒரு கேரக்ட்ரில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டால் அதன்பின் அதில் அவர் 100% ஈடுபாட்டுடன் நடிப்பார் என்று இயக்குனர் தெரிவித்தார்.