கமல்ஹாசன் படத்தில் நடிக்க மறுத்தாரா கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த்?
- IndiaGlitz, [Monday,January 27 2020]
கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 1983 ஆம் ஆண்டு உலகப் கோப்பையை வென்றது. இந்த வெற்றியை மையமாகக் கொண்டு உருவாக்கப் பட்ட “83” படத்தின் அவுட் லுக் வெளியீட்டு விழாவில் பத்ம ஸ்ரீ கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசினார்.
இந்தப் படத்தை கமலஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபில்ம்ஸ் மற்றும் Reliance Entertainment, Y not X ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன என்பது குறிப்பிடத் தக்கது. வருகின்ற ஏப்ரல் 10 ஆம் தேதி இந்தப் படம் தமிழ்,தெலுங்கு, இந்தி மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.
இயக்குநர் கபீர்கான் இந்தப் படத்தை இயக்கி இருக்கிறார். மேலும் அப்போதைய இந்திய அணியின் கேப்டன் கபில்தேவ் ஆக ரன்வீர் சிங் நடித்திருக்கிறார். அந்த அணியில் இடம் பெற்றிருந்த ஸ்ரீகாந்த் கிருஷ்ணமாச்சாரி கதாபாத்திரத்தில் தமிழ் நடிகர் ஜீவா நடிந்திருக்கிறார்.
கமல்ஹாசன் இந்தப் படம் “அவெஞ்சர் கதையை விட இது தான் உண்மையான ஹீரோக்களின் கதை” பல விளையாட்டு வீரர்களின் போராட்டமான வாழ்க்கை வரலாறுகள் இதில் பதிவு செய்யப் பட்டுள்ளது. இந்தப் படத்தை கபீர்கான் மிகவும் சிறப்பாக இயக்கி இருக்கிறார் என்றும் இதில் நடித்த அனைவரும் தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் என்றும் பேசி முடித்தார்.
விழா மேடையில் இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் கிருஷ்ணமார்சசாரியும் இருந்த நிலையில் அவரைப் பற்றியும் கமல்ஹாசன் சில கருத்துக்களைப் பகிர்ந்து கெண்டார். தான் நடித்த பஞ்சதந்திரம் படத்தில் “யூகி சேதுவின் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஸ்ரீகாந்த் கிருஷ்ணமாச்சாரியை முதலில் நான் அணுகினேன். முதலில் ஒப்புக் கொண்டவர் சிறு தயக்கத்தினால் பின்னர் மறுத்து விட்டார்” என்ற சுவாரசியமான தகவலைப் பகிர்ந்து கொண்டார்.