சோபியாவின் டுவிட்டர் பக்கம் திடீர் மாயம்

  • IndiaGlitz, [Tuesday,September 04 2018]

சென்னை-தூத்துகுடி விமானத்தில் சாதாரண சின்ன சண்டையாக ஆரம்பித்த தமிழிசை-சோபியா விவகாரம் அதன் பின்னர் காவல்துறையில் புகார், கைது, இந்திய அளவில் பாஜகவுக்கு எதிரான டிரெண்ட் என ஊடகங்களின் இன்றைய தலைப்பு செய்தியாகவும், தொலைக்காட்சிகளின் விவாத பொருளாகவும் மாறிவிட்டது.

இந்த நிலையில் சோபியா பாஜகவுக்கு எதிராக திடீரென இன்று ஒருநாள் மட்டும் தனது எதிர்ப்பை தெரிவிக்கவில்லை. கனடாவில் இருந்து கொண்டே தூத்துகுடி ஸ்டெர்லைட் பிரச்சனை, எட்டு வழிச்சாலை பிரச்சனை, இந்த பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்தவர்கள் குறித்து தொடர்ந்து தனது @Red_Pastures என்ற டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். சென்னையில் இருந்து தூத்த்குடிக்கு அவர் விமானம் ஏறுவதற்கு ஒருசில நிமிடங்களுக்கு முன்னரும் இன்று தமிழிசை முன் கோஷமிட போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் சற்றுமுன் சோபியாவின் டுவிட்டர் பக்கம் திடீரென மாயமானது. அவர் மீது சமூக விரோதி என்ற முத்திரை குத்தப்பட்டு வருவதால் அவர் தனது டுவிட்டர் கணக்கை டெலிட் செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

More News

சோபியா விடுதலைப்புலியா? சுப்பிரமணியன் சுவாமி சந்தேகம்

கனடாவில் விடுதலைப்புலிகள் அதிகம் இருப்பதால் கனடவில் படித்து கொண்டிருக்கும் சோபியாவும் விடுதலைப்புலிகளுடன் சம்பந்தப்பட்டவராக இருக்கலாம் என சுப்பிரமணியன் சுவாமி பத்திரிகை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

பராமரிப்பு இல்லாததால் சரிந்து விழுந்த மேம்பாலம்: கொல்கத்தாவில் பரபரப்பு

மேற்குவங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் கடந்த 1970ஆம் ஆண்டு கட்டிய பாலம் ஒன்று இன்று திடீரென சரிந்து விழுந்ததால் அந்த பாலத்தில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் பல இடிபாடுகளுக்கு இடையே சிக்கியுள்ளது.

விஜய், சூர்யாவுக்கு பாராட்டு தெரிவித்த கேரள அமைச்சர்

சமீபத்தில் கேரளாவில் ஏற்பட்ட இயற்கை பேரிடரால் அம்மாநிலமே பெருந்துன்பத்தில் மூழ்கியிருந்த நிலையில் கோலிவுட் திரையுலகில் இருந்து முதன்முதலில் உதவிக்கரம் நீட்டியது நடிகர் சூர்யாதான்

சோபியா ஜாமீனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்: வழக்கறிஞர் சண்முகசுந்தரம்

சோபியாவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மத்திய அரசு வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

அத்தனை அரசியல்வாதிகளும் குற்றவாளிகளே: சோபியா விவகாரம் குறித்து கமல்

தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் சென்னையில் இருந்து தூத்துகுடிக்கு விமானத்தில் சென்று கொண்டிருந்தபோது அதே விமானத்தில் பயணம் செய்த சோபியா என்ற மாணவி