'தல 56' தாமதத்திற்கு ஸ்ருதிஹாசன் காரணமா?

  • IndiaGlitz, [Saturday,September 05 2015]

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் 'தல 56' படத்தின் கிளைமாக்ஸ் ஆக்சன் காட்சிகளின் படப்பிடிப்புகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடைபெறவில்லை என்றும் அதற்கு ஸ்ருதிஹாசன் தேதிகள் கிடைக்காததுதான் காரணம் என கூறப்படுகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி என ஸ்ருதிஹாசன் பிசியாக நடித்து கொண்டிருப்பதால் ஸ்ருதிஹாசன், அஜீத் படத்திற்கு தேதிகள் கொடுக்க இழுத்தடிப்பதாக வெளிவந்துள்ள செய்தியை ஸ்ருதிஹாசன் தரப்பு உறுதியாக மறுத்துள்ளது. அஜீத் படத்திற்கு படக்குழுவினர் கேட்ட தேதிகள் சரியாக கொடுக்கப்பட்டதாகவும், ஸ்ருதிஹாசன் தரப்பில் எவ்வித தவறும் இல்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் ஸ்ருதிஹாசன் புதிதாக ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளும்போது தேதிகள் கொடுப்பதில் கவனமாக இருப்பார் என்றும் அவருடன் பணியாற்றியவர்களும் கூறுகின்றனர்.

இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் முடிந்த பின்னர், இன்னும் பாடல் காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட வேண்டிய நிலை இருப்பதாகவும், கூடிய விரைவில் படப்பிடிப்பு நிறைவு பெறும் என்றும் கூறப்படுகிறது.

More News

சூப்பர் ஸ்டார் ரஜினி கேரக்டரில் கார்த்திக்?

கடந்த 80 மற்றும் 90களில் கோலிவுட்டின் முக்கிய நாயகர்களில் ஒருவராக விளங்கிய நவரச நடிகர் கார்த்திக் நீண்ட இடைவெளைக்கு பின்னர் ரீ எண்ட்ரி ஆன...

சந்தானம் ஹீரோவாக நடித்த 'வாலிப ராஜா' ரிலீஸ் தேதி?

சந்தானம் தயாரிப்பில் அவரே ஹீரோவாக நடித்த 'இனிமே இப்படித்தான்' திரைப்படம் வெற்றி பெற்றதை அடுத்து சந்தானம் மீண்டும் ஹீரோவாக நடித்திருக்கும்...

அஜீத் தயாரிப்பாளரின் அடுத்த படம் பேய்ப்படமா?

குழந்தைகளிடம் பேய்க்கதை சொல்லி பயமுறுத்திய காலமெல்லாம் மலையேறிவிட்டது. தற்போது குழந்தைகளே பேய்க்கதைகள் சொல்வது...

தூங்காவனம்' டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து முடித்துள்ள 'தூங்காவனம்' படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது...

'தல 56' படத்தின் தமிழக வியாபாரம் முடிந்தது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் 'தல 56' படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் சென்னை பின்னி மில்லில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில்...